Header Ads



அக்கரைப்பற்று கடற்கரையில், முழு நிலவில்பாரிய கௌரவிப்பு விழா

பிரபல முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியரும், முஸ்லிம் மாகாண சபை முன்னோடியும், முஸ்லிம் உரிமைகள் மன்றத் தலைவருமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.முஹயத்தீன் அவர்களுக்கு முஸ்லிம் தேசிய ஆய்வகம் மூதறிஞர் பட்டமளித்து பாராட்டு விழா மேடையில் கௌரவிக்கவுள்ளது.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எம். ஆப்தீன் கலாபூஷணம் அவர்கள் மூதறிஞர் அவர்களை பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பார்.

அத்தோடு சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் அவர்களைப் பாராட்டி மூதறிஞர் முஹியத்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பார்.

இந்தப் பாராட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாக்களுக்கு முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்கள் தலைமை வகிப்பார். இன்ஷா அல்லாஹ்.

பாராட்டு விழா - சட்டத்தரணிப் பெண்மணிகள் நமது கண்மணிகள்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 1. சஸ்னா 2. ஸமா ஆனிஸ் 3. ஹூஸ்னா ஆகிய மூன்று சட்டப்பட்டதாரிகளான பெண்மணிகளும் இந்த வருட ஆரம்பத்தில்  சட்டத்தரணிகளாகப் பதவிப் பிரமாணம் செய்து தமது தாய் நகருக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

இவர்களை அகமகிழ்ந்து பாராட்டி கௌரவிக்கும் பாராட்டுவிழா மே 12 வெள்ளி மாலை அக்கரைப்பற்று கடற்கரையில்  முழு நிலவில் கலை இரவில் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. 

முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண் சட்டமுதுமாணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் அவர்களும் பாராட்டப்பட உள்ளார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்பாட்டாளர்கள்
முஸ்லிம் தேசிய ஆய்வகம்
அஸ்கர், நஸார்.

No comments

Powered by Blogger.