Header Ads



மிகவும் அபாயகரமான நிலையில், இலங்கையின் நிதி நிலைமை - உலக வங்கி

இலங்கை அரசாங்கத்தின் வருமானத்தினை அதிகரிக்க வேண்டியது அவசியம் என உலக வங்கியின் உப தலைவர் டான் வில்சர் வலியுறுத்தினார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில், நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் நிதி நிலைமை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், நிகர தேசிய வருமானத்தின் வீதத்திற்கமைய 10 வீத வரி வருமானமே உள்ளதால், அரசாங்கம் வரி வருமானத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் முதலீடுகளை மேற்கொள்வதுடன் தொழில்புரிபவர்களின் வருமானத்தினை அதிகரிப்பதனையும் முதலீடுகளினூடாக மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து, வெளிநாட்டு முதலீடுகளுக்கான சூழலை உருவாக்குவதன் மூலமும் இந்த இலக்குகளை சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும் என உலக வங்கியின் உப தலைவர் தெரிவித்தார்.


1 comment:

  1. ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
    (அல்குர்ஆன் : 15:21)

    ReplyDelete

Powered by Blogger.