Header Ads



பொதுபல சேனா யார்...?

-இனியவன் இசார்தீன் -

'துவேசம்; பேசித் துவம்சம் செய்யும்
பொது பலசேனா எப்படி இருப்பார்கள்? ' என்ற 
என்  மகன் கேள்விக்கு
நானறிந்தவைகளைத் தமிழில்  
நன்றாக விளக்கினேன்

ஏன் 
'இலங்கைத் தீவில் இணையத் தளத்தில் 
இன்றைய நேற்றைய செய்தித் தாள்களில்  
இரத்தச் சிவப்பில் வாந்தியெடுக்கும் 
இனவாதிகளை நீ பார்த்ததேயில்லையா? '

'நான் பார்த்தவர்களெல்லாம் ஆயுததாரிகள்'
அந்தரங்கமாய் ஆங்காங்கே சென்று
அப்பாவிகளிடம் அராஜகம் செய்யும் 
பயங்கரவாதிகள்

நிஜமாய்க் கூட பொது  பலசேனா
அப்படியா இருப்பார்கள்?

'அப்படியும் இருக்கலாம்
ஆனால் மகனே
காக்கைகள்  போல் கத்திக் கத்தி
காவி நிறத்தில் கொடுங்கோல் செய்யும் 
மனிதத்திற்கெதிரான போலிச்சாமிகளை
ஒருநாளும் நான் பார்த்ததேயில்லை'

இறைவனின் அச்சத்தால்  
எமது  இதயங்களில் நிறைந்த
மனித அமைதி

போதி புத்தனை புதைத்துவிட்டு
கொள்ளையடிக்கப்பட்ட 
எமது நிலமும் எம் பாரம்பரிய வியர்வையும்
நிர்வாண அநாச்சாரத்தை மறுக்கின்ற
நெறி பிறழா
இறைமறைக் கலாசாரம்

முள்ளம்பன்றி தன் தலையை மடித்து
முள்ளுக்குள் வைத்து மூடிக்கொள்வது மாதிரி
காவி நிறத்தில் தங்கள் காடைத்தனத்தை
மூடிக் கொள்வார்கள்

இந்த  போதையர்களிடம் பக்தி என்று 
பிறர் எப்போதும் பிழை கருதியதில்லை
பயங்கர இனவாத யுக்தி யென்று 
மனதாபிமானிகள் சபிக்கிறார்கள்

ஆன்மீகத்தால் மனிதஆன்மாவிற்கு
அமைதியூட்டுவதை விட்டு விட்டு
கசாப்புக்கடைக் கத்தியோடு
பூந்தோட்டத்துக்குள் புகுந்திருக்கிறார்கள்

போதி மர புத்தன் 
இவர்களுக்குள்ளிருக்கும் 
விலங்கைத் தோண்டியெடுத்து 
எப்போது தூர எறியப் பேகிறானோ அறியோம்

'ஆனால் மகனே
பொது பலசேனா எப்படியிருப்பார்கள்?  என்று
யாரைக் காட்டி நானுனக்கு இப்போது
அடையாளம் சொல்வேன்? '

பசையுள்ள வேதப் புத்தகத்தை
பகுத்தறிவின்றிக் கொறித்துத் தப்பும்
சுண்டெலி  போலவா?

போதி என்றும் போகி என்றும்
எங்கள் வாழ்க்கையை எல்லா வகையிலும்
கொள்ளையடிப்பவர்களுக்கு
மனிதத்தை ஒத்த முகமும் இ;ல்லை
மானுட வேசத்தில் முகமூடியும் இல்லை

ஆனால் ஒன்றை மட்டும் 
உனக்கு சொல்வேன் மகனே
தாய்நாடடில் அவஸ்தைகள் எது நடந்தாலும
இனவாதத்திற்கு ஒருபோதும் 
இடம் கொடுத்திட வேண்டாம்

1 comment:

  1. Some are utilizing this situation just for their 'POETRY'. They don't have any sense about the community. Their aim only about to publish their 'ABILITY'. SHAME. SHAME.

    ReplyDelete

Powered by Blogger.