Header Ads



நினை­வேந்தல் நிகழ்­வு, இலங்­கைக்கு சாப­மாக அமைந்­துள்­ளது - விஜ­ய­தாச

யுத்த வெற்றி தினத்தை நாம் கொண்­டாடி வரும் நிலையில் மறு­புறம் வடக்கில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் இடம்­பெ­று­கின்­றமை இலங்­கைக்கு சாப­மாக அமைந்­துள்­ளது. அர­சாங்கம் கொள்கை ரீதியில் தீர்­மானம் எடுக்­கு­மாயின் சுதந்­திர தினத்தில் யுத்த வெற்றி தினத்­தையும் கொண்­டாட முடியும் என நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ தெரி­வித்தார். 

யுத்­தத்தை வெற்றி கொண்­டதில் மஹிந்த, கோத்­தா­பாய ஆகி­யோரின் பங்­க­ளிப்­புக்கும் மதிப்­ப­ளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

யுத்த வெற்றி தின நிகழ்­வுகள் கொண்­டா­டப்­பட்­டமை தொடர்பில் கருத்து தெரி­வித்த போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

இந்த நாட்டின் கொடிய யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த நட­வ­டிக்­கையில் முன்­னைய அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்ட நகர்­வுகள் மிகவும் மதிக்­கத்­தக்க ஒன்­றாகும். அதேபோல் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ, முப்­படைத் தள­ப­திகள் உள்­ளிட்ட பாது­காப்பு படை­க­ளையும் நாம் மதிக்க வேண்டும். 

அவர்­களின் முயற்சி இல்­லாது இந்த யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தி­ருக்க முடி­யாது. அதேபோல் யுத்த வெற்றி தினத்தை கொண்­டாடும் போது நாம் அர­சியல் பிரி­வினை இல்­லாது அனை­வரும் ஒன்­றி­ணைந்து கொண்­டாட வேண்டும்.

 இந்த நிகழ்வில் பாகு­பாடு இருக்கக் கூடாது. யுத்­தத்தை வெற்றி கொண்­டதில் அவர்­களின் பங்­க­ளிப்­பிற்கும் முக்­கிய இடம் வழங்­கப்­பட வேண்டும். இரா­ணுவ வெற்றி தினம் ஒரு­புறம் நாம் கொண்­டா­டிய போதிலும் மறு­புறம் ஒரு இனம் தமது இன அழிப்பு தின­மாக இதனை நினைவு கூர்ந்து வரு­கின்­றது. 

ஆகவே இவ்­வா­றான ஒரு மோச­மான நிலை­மையில் நாம் செயற்­பட வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனினும் இலங்­கையின் சுதந்­திர தினம் போன்ற ஒரு தினத்தில் பெப்­ர­வரி நான்காம் திக­தியை இந்த தின­மா­கவும் இணைத்து எம்மால் கொண்­டாட முடி­யு­மாயின் அதுவே இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் அமையும். 

ஆகவே அர­சாங்கம் கொள்கை ரீதியில் ஒரு தீர்­மானம் எடுக்­கு­மாயின் அனை­வரும் பொது­வான ஒரு தினத்தில் இரா­ணுவ வெற்றி தினத்­தையும் கொண்­டாட முடியும். வடக்கில் பொது­மக்கள் தமது உற­வு­களை நினைவு கூர எந்தத் தடை­யையும் நாம் விதிக்­க­வில்லை. இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் இறந்­தனர். 

அவர்­களை நினை­வு­கூ­ரு­வது தவ­றில்லை. ஆனால் புலிகள் இலங்­கையில் தடை­செய்­யப்­பட்ட ஒரு ஆயுத அமைப்­பாகும். அவர்களை நினை­வு­கூர அனு­மதி இல்லை. அதையும் இவர்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும். எனினும் அமை­தி­யான வகையில் மக்கள் செயற்­பட்டு வரு­வார்­க­ளாயின் அர­சாங்கம் அவர்­களின் உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­படும். 

நாட்டின் இன ஐக்­கியம், தேசிய ஒற்­றுமை என்­பதை பலப்­ப­டுத்த வேண்டும். அதில் அதிக அக்­க­றை­யுடன் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் நாம் மிகவும் விரை­வான நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அவ்­வாறு இருக்­கையில் ஒரு­சிலர் தொடர்ந்தும் இன­வா­தத்தை கையில் எடுத்­து­கொண்டு சில மோச­மான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். கருத்­துக்கள் தெரி­விக்க சக­ல­ருக்கும் உரிமையுள்ளது. 

ஆனால் முன்வைக்கும் கருத்துக்கள் மூலம் நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் குழப்பங்கள்  ஏற்படக்கூடாது. நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் சகல நகர்வுகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்னெடுத்து செயற்படுவோம் என்றார்

1 comment:

  1. ஞானசாரவை ஊக்கவிக்கும் உனக்கு நாட்டின் இன ஐக்கியம் பற்றிப் பேச என்ன அருகதையுண்டு?

    ReplyDelete

Powered by Blogger.