Header Ads



மியன்மார் முஸ்லிம் அகதிகள், விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்...!


-AAM. Anzir-

யாழ்ப்பாண - காங்கேசன்துறைக் கடலில் காப்பாற்றப்பட்ட மியன்மார் அகதிகள்  விடயத்தை,  அரசியலாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் தலையீடு செய்துள்ளனர்.

அத்துடன் இவ்விவகாரம் 2 நாடுகளுடன் தொடர்புடையது.

அத்துடன் இலங்கை மற்றும் ஐ:நா. சபையிடையே 2005 ஆம் ஆண்டில் நடந்த ஒப்பந்தப்புடி தஞ்சம் கேட்டுவரும் ஒருவருக்கு, உயிர் அச்சுறுத்தல் என ஐ.நா. உறுதி செய்யுமிடத்து அவரை, அவர் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பலாகாது.

அப்படி அனுப்புவது சர்வதேச் சட்டங்களை மீறுவதாக அமையும்.

இதற்கு முன்னர் ஒலுவில் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகளும், மீரிகன தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு பின்னர் அவர்களை ஐ.நா. அகதிகள் முகவர் நிலையம் பாதுகாப்பான நாடுகளுக்கு அனுப்பிவைத்தது.

அவ்வாறே  இவர்களுக்கும் நடக்கட்டும் என பிரார்த்திபபோம்..!

இதைவிடுத்து இதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிடுவது மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் விளம்பர நோக்குடன் இதனை கையாள்வது போன்றன தேசிய மட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

பௌத்த இனவாத சக்திகளும் தலையிட்டு மியன்மார் முஸ்லிம்களை திரும்பி அவர்களுடைய நாட்டிற்கே அனுப்புமாறு வலியுறுத்தலாம்.

எனவே இங்கு நிதானமான போக்கே  அத்தியாவசியமானது.

மேலும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் இதுபற்றி கவனம் செலுத்தியிருப்புதாக அதன் தலைவர் அமீன் தெரிவித்தார்.

அவரும் இதனை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தலாகாது என வலியுத்தினார். மேலும் முஸ்லிம் சட்டவாளர்கள் மூலம் இதனை கையாள நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. அருமையான கருத்துக்கள்

    ReplyDelete
  2. It's true. ........please convey this NEWS to foolish SLTJ

    ReplyDelete

Powered by Blogger.