May 11, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான, இரத்தக்கரை படிந்த மோடி -நாமல்

இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து  நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் அப்பாவி மக்களை கொன்றதாக கூறி சர்வதேசம் சென்று முறையிட்டவர்கள் இன்று மோடியை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராகியுள்ளமைக்கு  அவர்கள்  வெட்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்விவொன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ..

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்ததாக சர்வதேசம் வரை சென்ற  தமிழரசு கட்சி அரசியல்வாதிகளும் மனோகனேஷன் போன்றவர்களும் இரத்தக்கரை படிந்த மோடியுடன் கை குலுக்க இன்று தயாராகிவிட்டார்கள்.

நாம் ஒரு அரசாங்கமாக இருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டோம்.ஆனால்,மோடி ஒரு இனத்தின் மீது நேரடியாக போர் தொடுத்தவர்,இப்போதும் தொடுத்துக்கொண்டிருப்பவர்.

2002ம் ஆண்டு இந்தியாவின் குஜ்ராத்தில் உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன.இதன் பின்னணியில் மோடி இருந்ததாக நேரடியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டதுடன் அவருக்கு எதிராக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அப்படியான ஒருவர் இன்று சர்வதேச வெசக் தினத்துக்காக இலங்கை வருகிறார்.ஒரு ஆண்மீக நிகழ்வுக்கு இப்படியான ஒருவரை அழைத்து வருவது வேடிக்கையான விடயமாகும்.

நாம் வெள்ளை வேண்களில் ஆள் கடத்தியதாக கூறி அரசியல் இலாபம் தேடிய மனோ கணேஷன் போனறவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியை வரவேற்க செல்கிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை.

இன்று கஷ்மீரில் தினம் தினம் அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்படுகிறார்கள்.ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.பல அப்பாவி பெண்களின் கற்பை இந்திய ராணுவம் சூரையாடியுள்ளது.பலரின் கண்கள் பறிக்கப்பட்டுள்ளன.இவற்றுக்குபின்னால் மோடி அரசும் அவரின் இரானுவமும் உள்ளது. எமக்கு எதிராக போர் கொடி தூக்கியவர் இதற்கு எவ்வாறுநியாயம் கற்பிக்க போகிறார்கள்.

மோடியின் வருகையால் இலங்கைக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை மாறாக எமது நாட்டு சொத்துக்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கபடுவதை தவிர வேறு ஒன்றும் நடக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 கருத்துரைகள்:

அருமையான கருத்து

this is politic talk but true

yes

all bloodies are palying game for the seat

மிகச்சிறந்த கருத்து

மாட்டின் பெயரால்
மனிதர்களைக் கொல்லவும் வன்புணர்வு செய்யயவுமான ஆட்சியின் கதாநாயகன்,அழைக்கப்பட்டிருப்பதோ பஞ்சமா பாவங்களைக் கைவிடச் சொல்லும் சித்தாந்தம் ஒன்றின் நிகழ்வுக்கு. முரணான தெரிவு. அல்லது காரணம் ஒன்றைச் சொல்லி வேறொரு விடயத்தை நாடிய விஐயமாக இருக்க வேண்டும்.

ELLAM MUTHALAI KANNEER THAN

A murderer should have not been invited to attend a religious ceremony.

atlast u know this now and talking.when u guys were in power u don't know all these.u don't know aluthgama,u don't know any other incidents.when u plan to take action a minister opposed.now he is in the government.if u can arrest Sarath fonseka y couldn't the culprits.

Mahinda Rajapakshe met Modi last night? What Namal is he going to say now? Don't get fooled by political talks!

Post a Comment