Header Ads



புத்தளத்தில் முஹம்­மது தமீம் சாமிலா, தீ மூட்டி கொலை

புத்­தளம் நள்­ளாந்­த­ளுவ பிர­தே­சத்தில் கண­வ­ரினால் தீமூட்டி எரிக்­கப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இளம் தாய் புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை மாலை சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார் என புத்­தளம் தலை­மையக பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர குண­வர்­தன தெரி­வித்தார்.

மது­ரங்­குளி நள்­ளாந்­த­ளுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த முஹம்­மது தமீம் சாமிலா (வயது 19) எனும் இளம் தாயே இத்­தீ­யினால் எரிந்து மர­ண­மா­கி­யுள்ளார்.

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நள்­ளாந்­த­ளுவ பிர­தே­சத்தில் இளம் குடும்­பஸ்­தர்­க­ளான மனை­விக்கும், கண­வ­னுக்கும் இடையே ஏற்­பட்டு வந்த குடும்ப தகராறு கார­ண­மாக ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் தனது மனை­வியை தீமூட்டிக் கொலை செய்ய முற்­பட்­டுள்ளார் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

சம்­பவம் இடம்­பெற்ற கடந்த 5ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஜூம்ஆத் தொழு­கைக்­காக அனை­வரும் சென்­றி­ருந்த வேளை­யி­லேயே சந்­தேக நப­ரான கணவன் தனது 19 வய­து­டைய மனை­வியை கட்­டி­வைத்து அவரது உடம்பின் மீது மண்­ணெண்­ணெயை ஊற்றிப் பற்ற வைத்­து­விட்டு அவர் அவ்­வி­டத்தை விட்டும் தப்பிச் சென்­றுள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனினும், தீயில் எரிந்­து­கொண்­டி­ருந்த குறித்த பெண்ணின் கூக்­குரல் கேட்டு அவ்­வி­டத்­திற்கு சென்ற அய­ல­வர்கள் பள்­ளிக்கு தொழு­கைக்­காகச் சென்­ற­வர்­களின் உத­வி­யுடன் கடு­மை­யான தீக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்த பெண்ணை புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

அத்­துடன், கடந்த 15 நாட்­க­ளாக புத்­தளம் மற்றும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­களில் குறித்த இளம் தாய்க்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த  போதிலும், அவ­ரது நிலைமை கவ­லைக்­கி­ட­மாக காணப்­பட்­ட­துடன், புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்­கி­ழமை மாலை உயி­ரி­ழந்­துள்ளார் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, குறித்த பெண்ணின் கண­வ­ரான சந்­தேக நபர் பிர­தே­சத்தில் இருந்து தப்பிச் சென்று கடந்த 15 நாட்­க­ளாக தலை­ம­றை­வா­கி­யி­ருப்­ப­தாகத் தெரி­வித்த புத்­தளம் தலை­மையக பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர குண­வர்­தன, அவரைக் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் கூறினார்.

மர­ண­மான இளம் தாய்க்கு ஏழு மாதக் கைக்­கு­ழந்­தை­யொன்று இருப்­ப­துடன், அவர் நான்கு மாத கர்ப்­பிணி எனவும் உற­வி­னர்­க­ளினால் தெரி­விக்­கப்­பட்ட போதிலும் அவை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இதே­வேளை திரு­மண வாழ்வின் போது உடல் ரீதி­யான இம்­சை­க­ளுக்கும் உள­வியல் ரீதி­யான பாதிப்­பு­க­ளுக்கும் உள்­ளா­கிய இந்தப் பெண், முஸ்லிம் காதி நீதி­மன்­றத்தின் ஊடாக விவா­க­ரத்து கோரு­வ­தற்கு முயற்­சித்­தி­ருந்தார்.

ஆனால் அது பல­ன­ளிக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து தனக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற குடும்ப வன்­முறை குறித்து பொலி­ஸா­ரிடம் இந்தப் பெண் முறை­யிட்ட போதிலும் பொலிஸார் அவரை சூழ்ந்­தி­ருந்த ஆபத்­துக்­க­ளுக்கு மத்­தி­யிலும் கண­வ­னுடன் சென்று சமா­தா­ன­மாக வாழு­மாறு அறி­வு­றுத்தி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்­தனர். அதன் பின்பே இந்த அனர்த்தம் நேர்ந்­துள்­ளது என்று பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பைச் சேர்ந்த முக்­கி­யஸ்­த­ரா­கிய ஸ்ரீன் ஸரூர் தெரி­வித்தார். 

இளவயதுத் திருமணத்தை அனுமதிக் காத இலங்கையின் அரசியலமைப்பானது, விருப்பத்திற்கு மாறான முறையில் சிறுமிகள் மற்றும் பெண்கள் முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுத்து நிறுத்தவில்லை.  அந்தவகையில் அவர்களது உரிமைகளை அரசியலமைப்பு பாதுகாக்க தவறியிருக்கின்றது என ஸ்ரீன் ஸரூர் சுட்டிக்காட்டினார்.

4 comments:

  1. Mosque trustees and ACJU need look in to people problems and give advice to the people.

    ReplyDelete
  2. திருமணம் நடைபெற்ற பொழுது குறித்த பெண்ணுக்கு 16 வயது என்பதையும், கணவனின் மூன்றாவது மனைவியாகவே இவர் திருமணம் செய்யப்பட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

    இலங்கையின் சிவில் சட்டங்களின் கீழ் சிறுமிகளை திருமணம் செய்வது மற்றும், பலதாரமணம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லாத நிலையில் குறித்த திருமணம் முஸ்லிம் தனியார் திருமண சட்டத்தின் கீழேயே சாத்தியமாகியுள்ளது.

    ReplyDelete
  3. they don't have Islam in life that is the main cause

    ReplyDelete

Powered by Blogger.