Header Ads



மதவாதத்தினால் நாட்டை குழப்ப, இனவாதம் தோற்றுவிக்கப்படுகிறது - ரணில்

எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரிவினைவாதத்தை எழுச்சியடைய வைக்க முயற்சித்த சில குழுக்கள், அது தோல்வி கண்டமையால் மதவாதத்தை முன்னிருந்தி நாட்டை குழப்ப முற்படுவதாகவும் இனவாத்தை தோற்றுவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எனினும், அதற்கு இடமளிக்க முடியாது எனவும் நாம் அணைவரும் ஒன்றிணைந்து அதனை கண்டிக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இன்று -23- அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கப் பெறாது போனதாகவும், அதன் பயனை பங்களாதேஷ் கைப்பற்றியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும், தற்போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரணில், அதன் பயனாக வர்த்தகங்களை மேற்கொண்டு வேகமாக வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.