Header Ads



முஸ்­லிம்­களின் காணியின் ஒரு, துண்­டை­யேனும் அப­க­ரிக்க மாட்டோம் - சீல­ரத்­ன ­தேரர்

-ARA.Fareel-

மாயக்­கல்­லியில் விகாரை  ஒன்­றினை  அமைப்பதற்கு தீக­வாபி பரி­வார சைத்­திய பர்­தி­வெல சந்­த­வெல தேரர் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளதை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம் என அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென பிர­தானி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார்.

இதே­வேளை, மாணிக்­க­மடு – மாயக்­கல்லி பிர­தே­சத்தில் நாம் விகா­ரை­யொன்றை மாத்­தி­ரமே நிர்­மா­ணிப்போம். பௌத்த குடும்பம்  ஒன்­றேனும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை பொறுப்­புடன்  கூறு­கிறேன். அத்­தோடு காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணியின் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என்­பதை இந்த வெசாக் நன்­நாளில் முஸ்­லிம்­க­ளுக்குத் தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கிறேன் எனவும் சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார். 

மாயக்­கல்­லியில் நிர்­மா­ணிக்­கப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்கும் விகாரை தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­கை­யிலே  அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

இங்கு விகாரை அமைப்­பதை தமி­ழர்கள் எதிர்க்­க­வில்லை. முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை. ஆனால், முஸ்லிம் இளை­ஞர்­களே எதிர்ப்பு தெரி­விக்­கி­றார்கள்.  

பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தாது. விகாரை  அமைப்­ப­தற்கு எமக்கு உதவி புரி­யு­மாறு முஸ்லிம் இளை­ஞர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்­கிறேன். விகாரை அமை­வதால் இப்­ப­கு­தி­யி­லுள்ள தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எவ்­வித பிரச்­சி­னையும் ஏற்­ப­ட­மாட்­டாது. பௌத்­தர்கள்  கரு­ணை­யுள்­ள­வர்கள். ஏனைய மக்­களை நாம் சகோ­த­ரர்­க­ளா­கவே கரு­து­கிறோம். 

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இந்த விவ­கா­ரத்தை தமது அர­சியல்  சுய­ந­லத்­துக்­காக பயன்­ப­டுத்தி வரு­கி­றார்கள். இங்கு ஓர் இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்கள். முஸ்லிம் மதத்­த­லை­வர்­களும், நாமும் கலந்­து­ரை­யாடி இவ்­வி­வ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ள முடியும். 

இங்கு நாம் புதி­தாக பன்­சலை அமைக்­க­வில்லை. இங்கு புரா­தன பன்­ச­லை­யொன்று  இருந்­தது. தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களின் ஆதிக்கம் நில­விய காலத்தில் இந்தப் பன்­ச­லை­யி­லி­ருந்த குரு­மார்கள் அதைக்  கைவிட்டு அம்­பா­றைக்கு வந்­தார்கள். யுத்தகாலத்தில் பன்சலை அழிவுக்குள்ளாகியுள்ளது. நாம் மீண்டும் அங்­கேயே விகா­ரை­யொன்­றிணை நிர்­மா­ணிக்­கப்­போ­கிறோம். 

மாயக்­கல்­லியில் விகா­ரை­யொன்று அமை­வதால் பௌத்­தர்­களை விட முஸ்­லிம்­களே பயன் பெறு­வார்கள். இங்கு விகாரை அமை­வதால் அவ்­வி­டத்தில் வர்த்­தக நிலை­யங்கள் உரு­வாகும்.  அந்த வர்த்­தக நிலை­யங்­களை முஸ்­லிம்கள் நடத்­தலாம். தீக­வாபி சைத்­தி­ய­வுக்குச் செல்லும் பக்­தர்கள் இந்த விகா­ரையில் காணிக்கை செலுத்­து­வ­தற்­காக வரு­வார்கள். அவ்­வாறு வரும் பக்­தர்கள் முஸ்­லிம்­களின் கடை­களில் பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வார்கள். எனவே முஸ்­லிம்கள் மதஸ்­தலம் ஒன்­றினை அமைப்­ப­தற்கு உதவி செய்ய வேண்டும். 

விகாரை நிர்­மா­ணிக்­கப்­பட்­டதும் விகா­ரைக்­குள்ளேயே நாம் இருப்போம்.  இப்­ப­கு­தியில் சிங்­க­ள­வர்­களை அழைத்து வந்து குடி­யேற்ற மாட்டோம் என்றார்.

விகாரை அமை­வ­தற்கு தேரர் எதிர்ப்பு 
மாயக்­கல்­லியில் விகாரை  ஒன்­றினை  அமைப்­பதற்கு தீக­வாபி பரி­வார சைத்­திய பர்­தி­வெல சந்­த­வெல தேரர் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளதை நாம் கண்­டிக்­கிறோம். 

சிங்­களக் குடும்­பங்கள் ஒன்­றேனும் இல்­லாத இடத்தில் விகா­ரை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டத்­தே­வை­யில்லை என்று அவர் கூறி­யி­ருக்­கிறார். இந்த கருத்­தினை அவர் சுய­நலம் கரு­தியே தெரி­வித்­துள்ளார். 

மாயக்­கல்­லியில் விகாரை அமைக்­கப்­பட்டால் தீக­வாபி சைத்­தி­ய­வுக்குச் செல்லும் பக்­தர்கள் இடையில் புதி­தாக அமை­ய­வுள்ள மாயக்­கல்லி விகா­ரைக்குச் சென்று தமது காணிக்­கை­களைச் செலுத்தி விட்டே  தீக­வாபி சைத்­தி­ய­வுக்குச் செல்­வார்கள். இதனால் சந்­த­வெல  தேர­ருக்கு வழ­மை­யாக கிடைக்கும் காணிக்கை இல்­லா­மற்­போகும். அவ­ரது வரு­மானம் பாதிக்­கப்­படும். இத­னா­லேயே விகாரை அமைக்­கப்­ப­டு­வதை அவர் எதிர்க்­கிறார். 

பௌத்­தர்கள் வாழும் இடங்­களில் மாத்­திரம் தான் விகா­ரைகள் அமைக்­கப்­பட வேண்டும் என்­பது தவறு. நாட்டில் பௌத்தர்கள் இல்லாத  சில பகுதிகளில் விகாரைகள் உள்ளன.

 துட்டகைமுனு அரசர் காலத்தில் கூட இவ்வாறு விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் இவரைப் பயன்படுத்தி வருகிறார்கள். இவர் முஸ்லிம்  மக்களை பௌத்தர்களுக்கு எதிராக தூண்டி வருகிறார். இதனை நாம் கண்டிக்கிறோம். இவரால் இப்பகுதியில் இனமுறுகல் ஏற்படுமே ஒழிய சகவாழ்வுக்கான  வாய்ப்பே  இல்லாமல் போகுமென்றார்.

8 comments:

  1. PLEASE BUILD UP MANY PANSSLA .
    NO PROBLRM AT ALL.
    IN THE FUTURE ALL PANSALA WILL BECOME MASJIDH LIKE OTHER FOREIGN COUNTRIES.

    ReplyDelete
  2. Dear Sana
    I am really appreciating if your intention is purely respecting other religious as guided by prophet

    ReplyDelete
  3. I think you are like a mate dog

    ReplyDelete
  4. If no Buddist people live in that area.. What is the purpose of building this temple there ?

    ReplyDelete
  5. My dear brothers don't u know what they plane now ,there are no Buddhism peoples have pray ,after temple build slowly they will settle .later u will see what we done mistake.look befor u leap.

    ReplyDelete
  6. So are you nuslim stray dog??

    ReplyDelete
  7. நல்லுர் கோவிலுக்கு பக்கதிலும் ஒரு புத்த விகாரையை கட்டுவதட்கும் அங்கிருக்கும் தமிழ் மக்கள் ஆதாரவு கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  8. Haha @ Shihabdeen... Chandra பால் சாதா பாலாயிற்று...

    ReplyDelete

Powered by Blogger.