Header Ads



இது மாதாந்த, வலி அல்ல..!

‘மாதவிலக்கு காலங்களில் அதிக வலியை உணர்ந்தால் அது எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்னையாகவும் இருக்கலாம் என்று பெண்கள் உஷாராக வேண்டும்’’ என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் கெளரி மீனா.‘‘கருப்பையின் உள் குழியின் உள்ளே இருக்கும் மெல்லிய சவ்வுக்கு எண்டோமெட்ரியம் என்று பெயர். மாதவிடாய் காலங்களில் சிலருக்கு இந்த சவ்வானது வயிற்றுக்குள் சிறுநீரகப்பை, மலக்குடல் போன்ற இடங்களில் சென்றுவிடும். கருமுட்டைக்குள் சென்றுவிட்டால் வெளியே வர இயலாமல் அங்கேயே தங்கிவிடவும் கூடும். இதனால் உதிரம் நீர்கட்டிகளாக மாறி, மாதவிடாய் காலங்களில் அடிவயிற்றில் வலி, இடுப்புவலி, அதிகப்படியான ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும்.

பருவமடைந்த வயதிலிருந்தே இந்தப் பிரச்னை வரத் தொடங்கிவிட்டாலும் 25, 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கே அதிகமாக வருகிறது.இதன் அறிகுறியாக அடி வயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் மாதவிலக்கு தொடங்குவதற்கு முன்பே வலிக்க ஆரம்பிக்கும். மாதவிலக்கு வந்த பின்னும் தொடரும் இந்த வலி மிக்க வேதனையைக் கொடுக்கும்.

சில பெண்கள் தாம்பத்திய உறவுக்குப் பின்னரும் இதேபோன்ற வலியை அனுபவிப்பார்கள். சில நேரங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும். இரண்டு மாதவிலக்கு காலங்களுக்கு இடைப்பட்ட நாட்களிலும் சிலருக்கு ரத்தப்போக்கு இருக்கும். இந்நோய் உள்ள 3-ல் ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தங்குவதில்லை. சிலருக்கு குழந்தையின்மைப் பிரச்னைக்குக் காரணமாகவும் எண்டோமெட்ரியாசிஸ் இருக்கிறது. அதனால் வழக்கத்துக்கு மாறான, அதிக வலியாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது’’ என்கிறார்.

No comments

Powered by Blogger.