Header Ads



வீடுகளுக்கு சென்று எயிட்ஸ் நோய், பரப்புவதாக வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை

வீடுகளுக்கு சென்று எயிட்ஸ் நோய் பரப்புவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லலை என தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளுக்கு சென்று இலவசமாக இரத்த பரிசோதனை செய்வதாகக் கூறி மக்களுக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்றை சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாக சமூக ஊடக வலையமைப்புக்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இவ்வாறு எயிட்ஸ் நோய் பரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த தகவல்களில் உண்மையில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளையில் பரவா நோய் தொடர்பில் இரத்தப் பரிசோதனை நடாத்த சீருடையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளுக்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு எயிட்ஸ் நோய் பரப்புவது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரையில் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறையைச் சாராதவர்கள் வீடுகளுக்கு வந்தால் உடனடியாக அருகாமையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.

1 comment:

  1. We should stay awake but not to be foold for free services.

    ReplyDelete

Powered by Blogger.