May 11, 2017

மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவ, ரிஸ்வி முப்தி அழைப்பு

-ARA.Fareel + விடிவெள்ளி-

மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் 30 மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் விவ­கா­ரத்தில் நீதி­மன்றம் வழங்கும் தீர்ப்­பினை நாம் ஏற்­றுக்­கொள்­வ­துடன் முஸ்­லிம்கள் உட்­பட அனை­வரும் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு உத­விக்­கரம் நீட்­ட­வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார். 

தற்­போது மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் 30 மியன்மார் அக­திகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே உலமா சபையின் தலைவர் இவ்­வாறு கூறி­னார்.  அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

‘எம்மை நாடி வந்த எந்த இனத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­றாலும் விருந்­தா­ளி­க­ளாக அவர்­களைக் கருதி அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் வழங்க வேண்டும். அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றே இஸ்லாம் போதித்­துள்­ளது. அவர்கள் தமக்­கேற்­படும் இன்­னல்­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்­கா­கவே நாட்டில் இருந்தும் வெளி­யேறி வந்­தி­ருக்­கி­றார்கள். இந்­நி­லையில் அவர்­களை அவர்­க­ளது நாட்­டுக்கே திருப்­பி­ய­னுப்ப வேண்டும் என்று கோரு­வது தவ­றா­ன­தாகும். எமது நாட்டில் சட்­ட­மொன்று இருக்­கி­றது. நீதிக் கட்­ட­மைப்­பொன்று இருக்­கி­றது. நாம் சட்­டத்தை மதிப்­ப­வர்கள் எனவே நீதிமன்றம் வழங்கும் தீர்ப்­பினை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்’ என்றார். 

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் 30 பேரும், இரு இந்­தி­யர்­களும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இலங்கை கடல் எல்­லை­யூ­டாக பட­கொன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது கட­லோர காவல் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு பின்பு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். வடக்கு கடல் எல்­லை­யி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். 

மல்­லாகம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் அக­திகள் 30 பேரையும் சிறைக்கு அனுப்­பாது மிரி­ஹான தடுப்­புக்­காவல் முகா­முக்கு அனுப்பி வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். மியன்மார் முஸ்லிம் அக­திகள் மியன்­மா­ருக்கு திருப்பி அனுப்­பப்­பட மாட்­டார்கள். அவர்­க­ளுக்கு நாடொன்று புக­லிடம் வழங்கும் வரை இலங்­கையில் தடுப்­புக்­காவல் முகாமில் வைக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் என அவர்கள் சார்பில் ஆஜரான ஆர்.ஆர்.ரி.சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மியன்மார் அகதிகளில் 7 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 16 சிறுவர், சிறுமிகள் அடங்குகின்றனர். 

2 கருத்துரைகள்:

அம்மக்கள் வந்து இரண்டு வாரம் கழிந்த நிலையில் இப்பதான் அறிக்கை வருகின்றன,அது போக இன்னும் 15 நாள்கள்தான் இருக்கிறது றமழான் தலைப்பிறை என்ன முடிவோ அல்லாஹ் பிரச்சினைகள் இல்லாமல் ஒரேயடியாக எல்லா கொள்கைவாதிகளும் ஒரே நாளில் பிறையை காண உதவி செய்வானாக

இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:100)
www.tamililquran.com

Post a Comment