Header Ads



அநீதி நடக்கிறதா..? எதிர்த்துப் போராடுங்கள்..!

கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக்கொள்ள விடுமுறை எடுத்த தாயாரை நிறுவனம் ஒன்று பணியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் Amanda Jensen என்ற தாயார் தனது 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இதே நகரில் உள்ள Lethbridge Lodging Association என்ற நிறுவனத்தில் சேர்ந்து தாயார் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 5-ம் திகதி பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்து வந்தபோது அவன் மிகவும் சோர்வாக இருந்ததைக் கண்டு தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, பரிசோதனைக்கு பிறகு மகனுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து தாயார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், மகனை அக்கறையுடன் பராமரிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு தனது நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘எனது மகனுக்கு புற்றுநோய் பாதித்துள்ளதால் அவனை பராமரிக்க வேண்டும். அலுவலக விதிப்படி எனது காப்பீட்டின் மூலம் 35 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் அந்த விடுமுறையை இப்போது வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

தாயாரின் கோரிக்கை நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், 3 வாரங்களுக்கு பிறகு அலுவலகத்தில் இருந்து தாயாருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் ‘உங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், பணியில் இருந்து உங்களை நிரந்தரமாக நீக்கியுள்ளதாகவும்’ அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

இதனை படித்து அதிர்ச்சி அடைந்த தாயார் நிறுவனத்தை அனுகி விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, அல்பேர்ட்டா மாகாண சட்டப்படி, ஒரு நிறுவனத்தில் ஒரு வருடம் முழுவதும் பணியாற்றிய ஊழியருக்கு தான் அவசரமான நாட்களில் தொடர்ந்து 35 வாரங்கள் விடுமுறை அளிக்கப்படும்.

ஆனால், நீங்கள் பணியில் சேர்ந்து 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளதால் உங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மாகாண சட்டத்தின் அடிப்படையில் மிகப்பெரிய தவறு உள்ளதால் இச்சட்டத்தை உடனடியாக திருத்த வேண்டும் என தாயார் தற்போது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், தாயாரின் கோரிக்கையை ஏற்ற தொழிலாளர் துறை அமைச்சரான Christina Gray, ‘இச்சட்டம் பொதுமக்களை பாதிப்பதாக உள்ளதால் இதனை மாற்றியமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.