Header Ads



நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் - சந்திரிகா

நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், ‘சிறிலங்கா அதிபர், பிரதமர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை தொடர்ச்சியாக கூடி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், கட்சிகள் மற்றும் தரப்புகளின் அறிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கின்றது.

ஆனால், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை நல்லிணக்கத்தின் மூலமே தடுக்க முடியும். இதனை இப்போது நாம் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடலாம். நல்லிணக்கம் மட்டுமே இன்னொரு ஈழக் கோரிக்கையைத் தடுக்கும்.

போரில் பங்களித்ததற்காக எந்த இராணுவத்தினரும் கைது செய்யப்படவில்லை. முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த நீதிக்குப் புறம்பாக ஊடகவியலாளர்கள் அரசியல் எதிரிகளின் படுகொலைகளில் தொடர்புபட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமக்கு எதிரானவர்களை இலக்கு வைப்பதற்கு சில அதிகாரிகள் இந்தப் படையினரைப் பயன்படுத்தியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இந்த அம்மாவின் கதையும் என்னாடி மீனாட்சி சொன்னது என்னாச்சி தான்...... சும்மா பேச்சி கொடுத்து இருக்காம வீட்டுல ஓய்வு எடுக்க சொல்லுங்க!

    ReplyDelete
  2. அம்மையார் அவர்களே!
    நீங்கள் நல்ல அரசியல்வாதிகளன்றுதான் நாங்களும் உங்களை நம்பியிருந்தோம். ஆனால் நீங்களுமொரு ஏனைய அரசியல்வாதிகளை போலதான். நீங்கள்,மஹிந்த, ரணில், மைத்ரி எல்லோரும் சிறுபான்மையினர் மீது ஒரே பார்வைதான்.அப்புறம் எங்க நாட்டில் நல்லிணக்கம் எப்படி வரப்போவுது. நாட்டில் நல்லிணக்கம் வளரவேண்டுமானால் முதலில் உங்கள் பார்வைகள் சரியானதாக,இனம், மதம் பாராது நாம் எல்லோரும் இலங்கையர்களென்ற உணர்வு உங்களைபோன்றுள்ள தலைவர்களிடம் எப்போ வருதோ அப்போதுதான் நமது நாட்டில் நல்லிணக்கம் உருவாகும். உங்களுக்கு ஞபாகமிருக்கிறதா மேடைகளில் மைத்ரி, ரணிலுக்காக பேசியது.நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் இனவாதத்தை உருவாக்குகிறவர்கள்,இனப்பிரச்சினையை உண்டுபண்ணுகிறவர்களையெல்லாம் நாய் கூண்டில் அடைப்போமென்று. அப்படியானால் இதுவரைக்கும் எத்தனை இனவாதிகளை இனம்கண்டுள்ளீர்க்க,எத்தனைபேரை அடைத்துள்ளீர்கள்.

    இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்து இரண்டு வருடமாகியும் ஏன் இன்னும் இனப்பிரச்சினையை உண்டுபண்ணுகிறவஹ்க்களை ஒன்றுமே செய்யாமல் இருக்கிறது .ஏன் உங்களிடம் அதிகாரமில்லையா. இல்லை மைத்ரி, ரணிலுக்கு விருப்பமில்லையா. இல்லை இனவாதிகள் இப்போது இல்லியா.இதில்
    வேற உங்களுக்கென்று ஒரு பதவி,அலுவலகம்.இதெல்லாம் எதுக்கு. அப்பாவி சிறுபான்மையினரை ஏமாத்தவா? ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது இந்த நல்லாட்சிதான் இனவாதிகளை உரம் போட்டு வளர்கிறது. பாவம் மஹிந்த. இது சிறுபான்மையினரான எங்களுக்கு தெரியாமல் நல்லாட்சியை கொண்டுவந்துவிட்டோம் . இப்போ நாங்கள் வருந்துகிறோம். உங்களையும், உங்கள் தலைவர்களையும் நம்பி ஏமாந்ததைவிட சிறந்தது தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்துபவர்களுடன் சேர்வது. பொறுத்திருந்து பார்ப்போம் உங்களது நல்லாட்சி எவ்வாறு சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதன்று.

    ReplyDelete
    Replies
    1. 'எந்த நாய்க்கூட்டில் யாரை அடைப்பதாகக் கூறி வாக்களித்து, மக்களின் வாக்குகளைக் கைப்பற்றி பதவிக்கு வந்தீர்களோ, அந்த நாய்க்கூட்டில் இன்று யாரை அடைப்பது என்று வாக்களித்த மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!'

      Delete

Powered by Blogger.