Header Ads



மியான்மர் அகதிகளும், எட்டிப்பார்க்காத வடமாகாண சபையும் - சட்டத்தரணி கடும் தாக்கு

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த மியான்மர் அகதிகளிற்கு வடமாகாண சபை உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பதிவு செய்திருந்தேன்…வடமாகாண சபையால் உருப்படியாக எந்த காரியமும் இன்று செய்யப்பட்ட்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது…குறைந்த பட்சம் அவ் அகதிகளை சந்தித்து ஒரு ஆறுதலையோ அல்லது தேறுதலையோ அல்லது உடுதுணிகளையாவது வடமாகாண சபையை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதியாவது இன்று செய்திருக்கலாம்…ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை…த.தே.கூ ஐ சேரந்தவர்களது “மனிதாபிமானம்” இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது…யுத்த பாதிப்பை நேரடியாக அனுபவித்த மக்கள் பிரதிநிதிகளது மனிதாபிமானம் வாழ்க…நிற்க.

இலங்கையில் அகதிகள் தொடர்பில் கரிசனை காட்டும் நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியையும் மற்றும் இவ் விடயம் தொடர்பில் உண்மையான அக்கறை உடைய நிபுணர்கள் சிலரையும் தொடர்பு கொண்டு இது தொடர்பில் இன்று உரையாடினேன்…

அவர்கள் கூறிய ஒட்டுமொத்த கருத்துக்களின் சாரம்சம் இதுதான்…

” இந்த 16 அகதிகளும் ஓர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர்…எக்காரணம் கொண்டும் மீள மியான்மரிற்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள்…இவ்வாறு இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் இவர்களிற்கு ஏற்றுக்கொள்ளக்படக்கூடிய விதமாக ஒரு தொகைப்பணம் வழங்கப்படும்…இவர்கள் உண்மையான அகதிகள்தானா என்பது தொடர்பில் ஓர் சர்வதேச அமைப்பால் விசாரணை செய்யப்படும்…அவ் விசாரணையில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் ஒரு வருட காலத்தினுள் அவர்கள் இரு பாதுகாப்பான நாடுகளில் குடியேற்றப்படுவர்….

அந்நாடுகள்….”ஐக்கிய அமெரிக்காவும், கனடாவுமே…”

ஆக, உறுதியாக இன்றிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் மியான்மர் அகதிகளிற்கு அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ அமைதியான வாழ்க்கை காத்துள்ளது…அவர்களிற்கான விசா கிடைக்கும் வரை அம்மக்கள் மேல் என் பார்வை இருந்துகொண்டே இருக்கும்.

ஆதரவளித்த எதிர்ப்பு காட்டிய அனைவரிற்கும் எனது நன்றிகள்..

நன்றி …மகிழ்ச்சி…

Stanislaus Celestine LL.B ( Colombo) Attorney at Law

2 comments:

  1. உலக தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுக்கும் தமிழ் சமூகம் தங்கள் பிரதேசத்தில் தஞ்சமடைந்த முஸ்லீம் அகதிகளை சந்திக்காமல் எவ்வித மனிதாபிமான உதவிகளையும் செய்யவில்லை .இதே போல்தான் வடமாகாண முஸ்லீம் அகதிகளையும் நடாத்தி வருகின்றார்கள் .இப்படியானவர்களுக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் உதவி செய்து வருவது ஆச்சரியமாக உள்ளது .

    ReplyDelete

Powered by Blogger.