May 24, 2017

முஸ்லிம்களே பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் - ஒரு முதலமைச்சரின் இனவாதம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் பிரச்சினைகள் இல்லையென்றும், முஸ்லிம்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதாகவும் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று -23- நடைபெற்றபோது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தாக்குதல்கள் குறித்து மாகாண சபையில் கண்டன உரையொன்றை ஆற்றினார்.

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் நெருங்கி வரும் நிலையில் ஒருசிலர் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

2014ல் அளுத்கமையில் நடைபெற்றது போன்று இனவாதத் தாக்குதல் ஒன்றுக்காக அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் பைரூஸ் ஹாஜியார் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, இது மாகாண சபையின் பிரச்சினை இல்லை. இங்கு பேசுவதால் எந்தப் பலனும் இல்லை.

அத்துடன் முஸ்லிம்களின் எந்தவொரு வர்த்தக நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்களும் பொய்யான தகவல்களாகும். மகரகம வர்த்தக நிலையம் மின் ஒழுக்கு காரணமாகவே சேதமடைந்துள்ளது.

முஸ்லிம்களே அவர்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி மோதிக் கொள்கின்றனர். இதில் நாங்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இனவாதப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். மற்றபடி எங்களால் முஸ்லிம்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்று பதில் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மாகாண சபை அமர்வில் பிரசன்னமாகியிருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்திருந்த நிலையில், மாகாண சபை அமர்வை ஒத்திவைக்க நேர்ந்துள்ளது.

4 கருத்துரைகள்:

அமைச்சர் மனோவிடம் கோல்பன்னி ஞானசாரவை பற்றி கதைத்த முதல்வன் இவன்தானா? இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் இதன்மூலம் தெளிவாக உள்ளது.

முஸ்லிம் சகோதர சகோதரிகளே! இந்த இனவாதிகள் எங்களுக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் நாங்கள் இத்தனை காலமாக ஆளுக்கொரு காட்சியமைத்து ஆளுக்காள் தலைவரன அவிவித்தொகுதிரிந்தது போதும் இனி நாங்கள் ஒன்றுபடும் காலம் நேரம் வந்தாச்சி, ஆகவே நீங்கள் ஒன்றுபடுங்கள் கூட்டணியாகுங்கள் என்பதைத்தான் அந்த இனவாதிகள் எங்களை ஊக்கப்படுத்துகிறார்கள். இது எங்களுக்கு விளங்குதில்லையென்றால் எங்களை போன்ற மடையர்கள் இந்த உலகத்தில் யாருமில்லை. TNA எங்களுக்கு நல்லொதொரு எடுத்துக்காட்டு. கட்சி என்ன எங்களது மதமா? அல்லது கட்சிமாறுவது ஷிர்க்கா? கொஞ்சம் சிந்தியுங்கள். நாங்கள் எளிய சிரிய கூட்டமாக இருக்கும்போது தனித்தனிய சாதித்துக்கொள்ள முடியாது. மஹிந்தர் தொட்டு மைத்ரி வரை எங்கள் அரசியல்வாதிகளால் தனிமையில் சந்திக்க முடியவில்லை.இதை கேட்பதுக்கே வெக்கமாக இருக்கு. ஆளுக்கொரு கட்சியை தூக்கி வீசிவிட்டு கூட்டணியாகுங்கள், ஒன்று சேருங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்குப்பிறகு பாருங்கள் உங்களுக்குள்ள மதிப்பையும் மரியாதையும்.

Yes mr. Noorul சரியாக சொன்னீர்கள் மக்கள்தான் சுயநலமினறி சிந்திக்க வேண்டும் மாற்றத்தை கொண்டு வரவோண்டும் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட்டால்தான் இது சாத்தியமாகும்.. இல்லையேல் ஊமை கண்ட கனவு போல்லாகிவிடும்.

முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் அனைத்து பிரதிநிதிகளும் தற்போது அரசில்தான் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏறத்தாழ கூட்டணி போன்ற ஓர் நிலையே! அதனால் பயனேதுமில்லை என்பது வெளிப்படையானது.

ஆதலால், முஸ்லிம்கள் அனைவரும் பரீட்சாத்தமாக அரசியலில் மூன்றாவது சக்தி ஒன்றை பேரினத்திலிருந்து உருவாக்க வேண்டும்!

முஸ்லிம்களுக்கான குரல் பெரும்பான்மை சிங்கள சமூகத்திடமிருந்து வெளிப்பட வேண்டும்! அதுவே பலமானதும், பாதுகாப்பானதுமாகும்!

தற்போதைய நிலையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க கூடிய தேசிய சிங்கள கட்சியாக இருப்பது மக்கள் விடுதலை முன்னணியே!

இவர்களிடம் மத, மொழி, இனவாதம் கிடையாது. ஆதலால் முஸ்லிம்கள் முற்று முழதாக அவர்களைச் சார்ந்து பலமான தேசிய இனமாகச் செயல்பட வேண்டும்! இது காலத்தின் தேவை!

Post a Comment