Header Ads



கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக, சவேந்திர சில்வா நியமனம்


இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் 11 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்றுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கடந்த ஏப்ரல் 21 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.

இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார்.

அனுராதபுர- சாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவு தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


No comments

Powered by Blogger.