Header Ads



காஷ்மீரில் பாகிஸ்தான், சவுதி சேனல்கள் முடக்குவதற்கு உத்தரவு

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த சேனல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் அரசிடம் உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துயுள்ளதாகவும் விரைவில் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை வழங்க மாநில அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் சேனல்கள் உரிமம் இன்றி ஒளிபரப்பப்படுவதற்கு வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உரிமம் இன்றி ஒளிபரப்பப்படும் சேனல்களை முடக்க கேபிள் ஆப்பரேட்டர்களின் உபகரணங்களை சோதனை செய்யும் உரிமம் மாநில அரசுக்கு உண்டு. 

இதுபோன்ற உரிமம் பெறாத சேனல்கள் ஒளிபரப்பப்படுவதை கண்காணித்து, அவற்றை முடக்குவதற்கான முழு அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. காஷ்மீர் மாநிலத்தை பொருத்த வரை மாவட்ட ஆட்சியர் அல்லது அதிகாரமுள்ள அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உபகரணங்களை முடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Kashmir must be given freedom and autonomy from the prolonged suppression of notorious Indian troops.
    Amnesty International must produce a resolution to the UN in this regard.

    ReplyDelete

Powered by Blogger.