Header Ads



மோடியின் மாட்டிறைச்சி தடையினால், விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்


மாட்டிறைச்சி தடை உத்தரவால் வன உயிரின பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்றும், விவசாயப்பணிகளுக்கு வாங்கக்கூட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வன உயிரின பூங்காக்களில் மிருகக் காட்சி சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மைசூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள காட்டுநாய்கள், புலி, சிங்கம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சுமார் 113 டன் மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி குறிப்பிட்ட இடைவௌிகளில் புலி, சிங்கம் விலங்குகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு விதித்துள்ள தடை காரணமாக மிருக காட்சி சாலையில் உள்ள இந்த விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தாலும் அவற்றை இந்த விலங்குகள் ஏற்பதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தகவல் உதவி
தின மலர்

No comments

Powered by Blogger.