Header Ads



அமைச்சர்களுக்கு வாகன கொள்வனவு, 6 மாதங்களில் 16600 லட்சம் ரூபா

அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் கடந்த ஆறு மாதங்களில் 16600 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று குறைநிரப்பு பிரேரணைகளின் அடிப்படையில் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 28 அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்ய 7900 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் மேலும் ஏழு அமைச்சர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யும் நோக்கில் 5400 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் சில வாரங்களுக்கு முன்னதாக ஐந்து அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் நாடாளுமன்ற விவகார செயலாளருக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக 3300 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த குறைநிரப்பு பிரேரணைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

2 comments:

  1. Haaa.What a beautiful country.
    God bless our country

    ReplyDelete
  2. பிரச்சினை இல்லை இறக்குமதி வெங்காயம் .செத்தல் மிளகாய்.மற்றும் ஈச்சம் பழம் அனைத்துக்கும் இறக்குமதி வரி அதிகரித்துள்ளது அதனால் இறக்குமதியாளர்களிடம் அரசாங்கம் மொத்தமாக வாங்கிக்கொள்ளும் இறக்குமதியாளர்கள் மக்களிடம் அறவிட்டுக் கொள்ளும்.அரசாங்கம் அது என்ன ஒரு சாங்கமா?

    ReplyDelete

Powered by Blogger.