Header Ads



இவ்வருடம் 3 மாவட்டங்களில் தேசிய மீலாத் விழா - அமைச்சரவை அங்கீகாரம், 14 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் (16) இடம்பெற்ற கூடிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு,

தேசிய மிலாதுன் நபி நிகழ்வு தொடர்பில் அனைத்து அமைச்சுக்கள் மட்டத்தில் நிகழ்ச்சிகளை செயற்படுத்தல் (விடய இல.23)

இவ்வருடம் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நபியவர்களின் பிறந்த தின நிகழ்விற்காக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் பிரதான நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் சமய விவகாரங்களை அபிவிருத்தி செய்ய திறைசேரியினால் 14 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வை கொண்டாடுவதற்காக வேண்டி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள முஸ்லிம் சமய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கும் தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3 comments:

  1. இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை நடத்துவதாற்கு எடுக்கும் முயற்சியால் உண்மையான இஸ்லாமிய பண்பாடுகளும் கலாச்சாரங்களும் குழி தோண்டி புதைக்கப்படுகிறது.இப்போதுள்ள பிரச்சினைக்கு மீலாத் விழா தேவையா அல்லது முஸ்லீம்களின் உயிர் உடமை.பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா?மீலாத் விழாவை காட்டி ஏமாற்றும் இந்த அரசாங்கம் நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர மறுக்குறது,

    ReplyDelete
  2. இதற்கு அகில இலங்கை ஜமியத்துல் உலமாவும் ஆதரவா ???

    இந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்தாலும் நன்மை கிடைக்கும். இந்த பணத்தை வைத்து எத்தனை குடும்பங்களை வாழ வைக்க முடியும். இன்று எத்தனையோ பேர் வறுமையால் பாவத்தின் பக்கம் செல்கிரார்கள் இதை இந்த முஸ்லிம் சமுகம் இன்னும் உணர வில்லையா. என் உயிருக்கும் மேலான நபி காட்டித்தராத இந்த வழியை மக்கள் உயிராக மதித்து செய்வதை நினைத்து மிகவும் மன வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  3. மீலாத் விழாவை கொண்டாடி சாதிப்பதிலும் பார்க்க பாதகமான அறுவடைகளே அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் என ஒரு பெருங்கூட்டமே வந்து முஸ்லிம்கள் சகல சௌபாக்யங்களுடன் அரசால் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ளனர் என சர்வதேசத்திற்கு சான்றிதழ் வழங்கிவிட்டு செல்வார்கள்.
    இதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் உலமாக்கள் என கூட்டம் வக்கற்ற முறையில் ஒத்து ஓதிவிட்டு இருட்டறையில் தூங்கிவிடுவர்.
    ஆனால் அடுத்த கணப்பொழுதே ஞானம்சாரா தேர்ர் கூட்டமும் இந்திய காவிகளின் அடிவருடிகளும் தமது நிகழ்ச்சி நிரலுடன் களமிறங்க தயார்படுத்தப்பட்டிருப்பர். இதை அறியாத மேதாவி இயக்கவாதிகள் தங்களுக்குள் சண்டையிட்டு மேலும் பிரிவினைக்கு பெற்றோல் ஊற்றுவர். இதனைச் சாதகமாக பயன்படுத்தி இன்னும் சில பல சிலைகளை எமது தலையில் நிறுவி பண ஓதுவர். அப்போதும் எமது அரசியல் தலைமைகள் தனது பக்கற்றை நிரப்ப ஏதாவது பேரம்பேசலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்.
    முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அள்ளாஹ் போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.