Header Ads



கடத்தப்பட்ட 2 முஸ்லிம்களையும் விடுவிக்க 30 இலட்சம் கப்பம் கோரல்


கம்­பளை நகரில் இரண்­டரை வயது குழந்­தை­யுடன் இளைஞர் ஒரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் உற­வி­னர்­களால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

மொஹமட் சல்மான் என்ற இரண்­டரை வயது குழந்­தையும் பது­ளை­யி­லி­ருந்து மருத்­துவ பரி­சோ­த­னைக்கு வந்­தி­ருந்த குறித்த குழந்­தை யின் உற­வி­ன­ரான மொஹமட் அஸாம் என்ற 23 வயது இளை­ஞ­ருமே கடத்­தப்­பட்­டுள்­ளனர்.

சம்­ப­வ ­தி­ன­மான  புதன்கிழமை 2.30 மணி­ய­ளவில் கம்­பளை கங்­க­வட்ட வீதியில் அமைந்­துள்ள கடத்­தப்­பட்ட குழந்­தையின் தந்­தையின் வர்த்­தக நிலை­யத்­துக்கு சுமார் 50  யார் தூரத்தில் அமைந்­துள்ள அவரின் வீட்­டி­லி­ருந்து, குறித்த இளைஞன் குழந்­தை­யையும் தூக்­கிக்­கொண்டு பகல் உணவை எடுத்து வந்தபோதே இரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரியவரு­கி­றது.

 சம்­பவம்  நடை­பெற்ற பின்னர் மதியம் 3.30 மணி­ய­ளவில் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் இளை­ஞனின் தொலை­பே­சி­யூ­டாக குறித்த குழந்­தையின் தந்­தையின் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் குறித்த இரு­வரும் பத்­தி­ர­மாக இருப்­ப­தா­கவும் தாங்கள் மாலை 6 மணி­ய­ளவில் மீண்டும் தொடர்பு கொள்­வ­தா­கவும் கூறி தொலை­பே­சியைத் துண்­டித்து விட்­ட­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர். 

இதே­வேளை கடத்தல்காரர்கள் கூறி­ய­தைப்­போன்று,  மீண்டும் தொடர்பு கொள்­ளா­மை­யை­ய­டுத்து  இது குறித்து கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில்  முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது. இதே­வேளை, குறித்த குழந்­தை­யையும் சிறு­வ­னையும் விடு­விப்­ப­தற்கு 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்­பட்­டுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. இந்தச் சம்­பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

No comments

Powered by Blogger.