Header Ads



சிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ந்தது

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கடந்த ஆண்டு சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 8 டொலரினால் (0.21 வீதம்) வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு தனிநபர் வருமானம் 3835 டொலர் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடைசியாக சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 2001ஆம் ஆண்டிலேயே வீழ்ச்சியடைந்தது. அப்போது 31 டொலர் வீழ்ச்சியைச் சந்தித்து, தனிநபர் வருமானம் 838 டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.