Header Ads



இரவு 11 மணிக்கு மோடிக்கு, இராப்போசன விருந்து வழங்கிய ஜனாதிபதி


உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை சென்றுள்ளார்.

இன்று மாலை கட்டுநாயக்க சர்வேதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

இந்நிலையில், அவருக்கு அதி உயர் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

இன்று இரவு 11 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார்.


இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் இ.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.


இலங்கைக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. ஆகா...நீங்கள் சரியான காமெடி பேர்வளிகள் தான்.

    ஒரு பக்கம் மோடியை எதிரி/விஷம் என வெளியில் திட்டுகிறீர்கள், என்னொரு பக்கம் உங்கள் மினிஸ்டர்களை அனுப்பி மோடியிடம் தலைவணங்குகிறீர்கள்.

    ReplyDelete
  2. இவன் இட்லி சாம்பாறுதான சாப்பிடுவான் மச்சம் சாப்பாடு மனித இரத்தம் மட்டும்தான் இவனுக்கு பிடிக்கும்.அது செரி பௌசி எதற்காக இதுக்குள் நுளைந்தார்

    ReplyDelete
  3. Mr.அட்டதோனி நாங்கள் எந்த கேடிக்கும் தலைவணங்கமாட்டோம்.

    ReplyDelete
  4. It is useless to commnt or reply to the one like antonyeaj....it seems he s hvng some peoblm wth his deep mind...thre r medications availble

    ReplyDelete

Powered by Blogger.