Header Ads



ICC சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி 8 தூதுவர்களில் சங்கக்காரவும் ஒருவர்

இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் எதிர்­வரும் ஜூன் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான சம்­பியன் தூது­வர்­க­ளாக இலங்­கையின் குமார் சங்­கக்­கார உட்­பட எட்டு பிர­பல வீரர்­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை பெய­ரிட்­டுள்­ளது.

குமார் சங்­கக்­கா­ர­வை­விட பாகிஸ்­தானின் ஷஹித் அவ்­றிடி, பங்­க­ளாதேஷ் ஹபிபுல் பஷார், இங்­கி­லாந்தின் இயன் பெல், நியூ­ஸி­லாந்தின் ஷேன் பொண்ட், அவுஸ்­தி­ரே­லி­யாவின் மைக் ஹசி, இந்­தி­யாவின் ஹர்­பஜன் சிங், தென் ஆபி­ரிக்­காவின் கிரேம் ஸ்மித் ஆகி­யோரும் சம்­பியன் தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

குமார் சங்­கக்­கார 2002 முதல் 2013வரை ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளார். ‘‘சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான தூதுவர்­களில் ஒரு­வ­ராக சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை என்னை பெய­ரிட்­டுள்­ளமை எனக்கு கௌர­வ­மாக இருக்­கின்­றது. இந்த வாய்ப்பை வழங்­கிய பேர­வைக்கு நான் நன்­றி­யு­டை­ய­வ­னாக இருக்­கின்றேன்.

கடந்த காலங்­களில் நான் மிகுந்த ஈடு­பாட்­டுடன் பங்­கு­ பற்­றிய கிரிக்கெட் விளை­யாட்டுப் போட்­டி­யுடன் நெருக்­க­மாக செயற்­பட எனக்கு வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டிகள் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு எனது பங்­க­ளிப்பை வழங்க நான் தயா­ராக இருக்­கின்றேன்’’ என சம்­பியன்ஸ் தூது­வர்­களில் ஒரு­வ­ராக பெய­ரி­டப்­பட்­டுள்ள குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

‘‘இன்னும் இரண்டு வரு­டங்­களில் இதே சூழலில் நடை­பெ­ற­வுள்ள 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான முன்­ஆ­யத்­த­மாக மீள் எழுச்­சியை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்கும் இளம் இலங்கை அணி பயன்­ப­டுத்­திக்­கொள்ளும் என நான் நம்­பு­கின்றேன்’’ எனவும் சங்­கக்­கார தெரி­வித்தார்.

குமார் சங்­கக்­கார 404 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் 25 சதங்கள், 93 அரைச் சதங்கள் அடங்­க­லாக மொத்தம் 14,234 ஓட்­டங்­களைக் குவித்­த­வ­ராவார்.

இந்த எட்டு தூது­வர்­களும் மொத்­த­மாக 1,774 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாடி 51,906 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றுள்­ளனர். இவர்­களால் 48 சதங்கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 838 விக்­ெகட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் எதிர்­வரும் ஜூன் முதலாம் திக­தி­முதல் 18ஆம் திக­தி­வரை லண்டன் ஓவல், பேர்­மிங்ஹாம் எஜ்­பஸ்டன், கார்டிவ் வெல்ஸ் ஆகிய மூன்று மைதா­னங்­களில் நடை­பெ­ற­வுள்­ளன.

இதனை முன்­னிட்டு ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்­ண­மான நிசன் கிண்ணம் ஐக்­கிய இராச்­சி­யத்தில் சுற்­றுப்­ப­ய­ண­மாக கொண்டு செல்­லப்­ப­டும்­போது இந்த எட்டு தூது­வர்­களும் அதில் பங்­கேற்­க­வுள்­ள­தாக சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை அறி­வித்­துள்­ளது.

அத்­துடன், நல­னுக்­கான கிரிக்கெட் பயிற்சி நிலை­யங்­களில் நடத்­தப்­படும் பயிற்­சி­க­ளின்­போது கிரிக்கெட் மேதை­க­ளுடன் (எட்டு தூது­வர்கள்) பாட­சாலை பிள்­ளைகள் விளை­யா­டு­வ­தற்­கான திட்ட நிகழ்ச்­சியும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த எட்டு கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) ஆசிரியர் பீடத்தில் இணைக்கப்படுவதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான முன்னாய்வு கட்டுரைகளையும் அணிகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கட்டுரைகளை யும் ஐ.சி.சி. யின் இணையத்தளத்தில் பிரத்தியேகமாக வெளியிடுவர்.

No comments

Powered by Blogger.