Header Ads



இலங்கைக்கு வெற்றி - கிடைத்தது GSP +

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

குறித்த வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமான முறையில் நிறைவடைந்துள்ளதுடன், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை இலங்கை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டி வருவதாக குற்றம் சுமத்தி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரிகள் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனடிப்படையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் சமர்ப்பித்திருந்த யோசனைக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதில், குறித்த யோசனைக்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.