Header Ads



இலங்கையை சைக்கிளில் சுற்றி, வலம்வரும் சாதனைப் பயணம்


-எம்.கே.எம். சமீம்-

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் இன்று 12.04.2017 பிற்பகல் 12.30 மணியளவில் புத்தளம் - புளிச்சாக்குளம் பிரதேசத்தை வந்தடைந்தார்.

இவர்  08.04.2017 இல் வவுனியா நகரில் ஆரம்பித்து 18.04.2017 அன்று மீண்டும் வவுனியாவை சென்றடைவதாக கூறினார். இவரது இந்தப் பயணம் சுமார் 1515 கி.மீ. ஆகும். மொத்தமாக 11 நாட்களில் இலங்கையை சைக்கிளில் சுற்றி வலம்வந்து சாதனை படைக்கவுள்ளார்.

இவரது இப் பயணத்தின் நோக்கம் இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் போதுமான அளவு 'ஓய்{தியக் கொடுப்பனவு„ வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் என்பதே. இவரது இப்பயணமும், கோரிக்கையும் வெற்றிகரமாக அமைய எமது ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

No comments

Powered by Blogger.