Header Ads



அதிவேக நெடுஞ்சாலை, அரசியல் கட்சிகளுக்கு இலவசம்

அதிவேக நெடுஞ்சாலைகளை மே முதலாம் திகதி எவ்வித கட்டணமும் செலுத்தாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (07) முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதம் ஆரம்பமானது.

இதில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு அறிவிப்பை விடுத்தார்.

குழுக்களின் பிரதி தவிசாளரே மே தினத்தன்று கூட்டங்கள், பேரணிகளில் கலந்துகொள்வதற்காக கட்சி ஆதரவாளர்கள் வரவுள்ளனர்.

எனவே, அன்றைய தினம் அதிவேக நெடுஞ்சாலைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனால், அன்றைய தினம் சகல அரசியல் கட்சிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.