Header Ads



'முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த அரசாங்கத்துக்கும், இந்த அரசாங்கத்துக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை'

மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் முஸ்லிம்­களின் காணி சுவீ­க­ரிக்­கப்­பட்டு விகாரை நிர்­மாணப் பணி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லா­ளர் எம்.ரி.ஹசன் அலி கருத்து தெரி­விக்­கையில்;

‘கிழக்கில் பல பிர­தே­சங்கள் முஸ்­லிம்­களின் காணிகள் தொல்­பொருள் பிர­தே­ச­மாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. மாயக்­கல்லி மலை­ய­டி­வாரம் போல் எதிர்­கா­லத்தில் பல காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட இதுவே ஆரம்­ப­மாக அமையும். 

தொல்­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்­றாலும் மத ரீதி­யான காணி ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது.

இவ்­வா­றான செயல்கள் இனிமேல் இடம்­பெறக் கூடா­தென்றே முன்­னைய மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தை முஸ்­லிம்கள் எதிர்த்தார்கள். தோல்வியடையச் செய்வதில் பங்குதாரர்கள் ஆனார்கள். என்றாலும் முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்துக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை என்றார். 

இறக்காமம் மாயக்கல்லிப் பகுதியில் இடம்பெற்று வந்த முறுகலையடுத்து இப்பிரதேசத்துக்குள் எவரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை உட்பிரவேசிக்கக் கூடாதென அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் உத்தரவொன்றும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

காணி உரி­மை­யா­ளர்கள் கடும் எதிர்ப்பு
மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை அண்­டிய பகு­தியில் தனியார் காணியை ஆக்­கி­ர­மித்து அங்கு பலாத்­கா­ர­மாக பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு அம்­பாறை நீதி­மன்றினால் இடைக்­காலத் தடை­உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில் அம்­பாறைக் கச்­சே­ரியில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற கூட்­டத்­திற்கு அக்­காணி உரி­மை­யா­ளர்கள் கடும் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி உள்­ளனர்.

கடந்த வாரம் மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்லிம் மக்­களின் காணி­களில் அத்­து­மீறி விகாரை அமைக்க எடுத்த முயற்­சிக்கு அம்­பாறை மாவட்ட மேல­திக நீதி­பதி சசி­கலா லக்­மாலி தச­நா­யக்கவின் உத்­த­ர­விற்­கி­ணங்க இடைக்­காலத் தடை­உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

“சட்டம், நீதி போன்ற விட­யங்­களில் நம்­பிக்கை கொண்டு செயற்­படும் எமக்கு கடும்­போக்­கு­வா­தி­களைக் கொண்டு எடுக்­கப்­படும் தீர்­மா­னத்­திற்கு எமது ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்” என பெயர் குறிப்­பிட விரும்­பாத காணி உரி­மை­யாளர் தெரி­வித்தார். 

எங்­க­ளி­ட­மி­ருந்த பூர்­வீகக் காணி­க­ளுக்கு மாற்றுக் காணிகள் 2 ஏக்கர் தரப்­படும் என்ற ஒரு­த­லை­பட்ச முடி­வுக்கும் எங்­க­ளது இணக்கம் பெறப்­ப­டா­மலும் எங்­க­ளது பள்­ளி­வாசல் தர்­ம­கர்த்தா குழு­வி­னரை அழைத்து தீர்­மா­னங்கள் பெறப்­ப­டாமை குறித்தும் கடும் ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தாக மற்றும் ஒரு காணிச்­சொந்­தக்­காரர் தெரி­வித்தார். 

மேலும் கடும்­போக்­கு­வா­தி­களின் நெறிப்­ப­டுத்­தலால் அரங்­கேற்­றப்­படும் இந்நாடகத்தினால் இறக்காமம் பிரதேசத்தில் என்றும் எப்போதும் தேங்காயும், பிட்டும் போல் வாழ்ந்துவரும் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே கசப்பான உணர்வுகள் ஏற்பட்டுள்ளமை கவலையைத் தருகின்ற விடயமாகும் என்றும் பிரதேச முஸ்லிம்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

1 comment:

  1. ஹசன் அலி அவர்கள் மஹிந்த அரசாங்கத்தின் அநீதிகளை கடுமையான தொனியில் எதிர்த்து வந்தார் .தற்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் என்பதால் மிகவும் மிருதுவான தொனியில் எதிர்க்கின்றார் .

    ReplyDelete

Powered by Blogger.