Header Ads



ஜனாதிபதியின் மற்றுமொரு சர்ச்சைக்குரிய, வர்த்தமானி வெளியானது

-DC-

நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   மாலை நேற்று மாலை கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இந்த சட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குப்பை சேகரிப்பு, குப்பைகளை எடுத்துச் செல்லல், தற்காலிகமாக குப்பைகளை களஞ்சியப்படுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளல், தாமதப்படுத்தல், இடைஞ்சலாக இருத்தல் என்பன குற்றமாக கருதப்படும்.

இதுபோன்ற செயற்பாடுகளினால் அச்சுறுத்தல் விடுத்தல், பொது மக்களைக் கோபமூட்டுதல் போன்றனவற்றின் மூலம் குப்பை சேகரிப்பு நடவடிக்கைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

இதுபோன்ற குற்றங்களை செய்யும் எந்தவொரு நபரும் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.