Header Ads



கந்தூரி சாப்பாடு முதல்நாள், சமைக்கப்பட்டதால் நஞ்சாகியிருக்கலாம் - டாக்டர் அழகையா லதாகரன்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் இடம்பெற்ற வருடாந்த கந்தூரி நிகழ்வில் பிரதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி சமீபத்திய பிரதேச முஸ்லிம்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

சிகிச்சை பெற வந்தவர்களில் சுமார் 350 பேர் வரை வைத்தியசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தற்போது 75 - 80 பேர் வரை தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார் மாகாண சுகாதார சேவைகள் துனை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன்.

மாட்டிறைச்சி மற்றும் நெய் கலந்த கந்தூரி சோறு இவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த உணவை உட் கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தூரி உணவு உட் கொண்டவர்களிடம் வாந்தி, மயக்கம் , தலையிடி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 4 மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் 3 மரணங்கள் மட்டுமே உணவு விஷமானதால் ஏற்பட்ட மரணங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டோரின் வாந்தி . குருதி, மலம் மற்றும் உட் கொண்ட உணவு மாதிரிகள் ஆகியன பெறப்பட்டு இரசாயன மற்றும் உயிரியல் பகுபாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது"என்றும் அவர் கூறுகின்றார்..

''நோயுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சம்பவத்திற்கு முதல் நாள் மாலை சமைக்கப்பட்டு பொதியிடப்பட்டு மறுநாள் காலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றுக்குள்ளாகி உணவு நஞ்சாகியிருக்கலாம்" அவர் குறிப்பிடுகின்றார்.

2 comments:

  1. I'm not telling you this is a Bida or not...but this type of feast is not necessary for many reasons..
    For health reason
    for religious reason
    for economic reason .
    Frist of all it is healthy to cook like this ..
    It is not good people with diabetic and blood pressure..
    It is not spend money like this .
    Above.all it is a Bada .
    What do you think others will think about us with this example..

    ReplyDelete
  2. Wasting money in vain. Those money could be spent for orphanage or for social wefare activities.

    ReplyDelete

Powered by Blogger.