Header Ads



' உஷாராக வேண்டிய நேரம் இது’ - அத்தனையும் தொல்லை..!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 340 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.இப்போது பிரச்னை எண்ணிக்கையைப் பற்றி அல்ல... இந்த ஊடகங்களைப் பயன்படுத்துகிறவர்களின் மனநிலையைப் பற்றி...

19 முதல் 32 வயதுள்ள 1,787 அமெரிக்க இளைஞர்களிடம் மனம் மதிப்பீட்டு கருவி மற்றும் கேள்வித்தாள்கள் பயன்படுத்தி ஓர் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், பின்ட்ரெஸ்ட், மற்றும் லிங்க்டு இன் போன்ற மிகப்பிரபலமான சமூக ஊடகத் தளங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன.

வெவ்வேறு சமூக வலைதளங்களை ஒரேநேரத்தில் பயன்படுத்தி வருகிறவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நபர் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், கூகுள் ப்ளஸிலும், வாட்ஸ் அப்பிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு நிச்சயம் மன அழுத்தம் வருகிறது என்பது உறுதியானது.

ஒன்றிரண்டு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை விட, இதுபோல் அதிகமான சமூகவலைதளங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு 3 மடங்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‘எனவே கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ ஒன்றுக்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களில் இணைந்திருப்பவர்கள் உஷாராக வேண்டிய நேரம் இது’ என எச்சரித்திருக்கிறார் ஆய்வை நடத்தியவரான டாக்டர் பிரியென்ப்ரிமேக்.ஸோ... அலர்ட் ஆகிக்கங்க மக்காஸ்...

No comments

Powered by Blogger.