Header Ads



சுவிட்சர்லாந்தில் அல் குர்ஆனுக்கு, தடைவிதிக்க கோரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிற்கு தடை விதிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி விடுத்துள்ள கோரிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சுவிஸ் நாட்டின் தேசிய கவுன்சிலரும் சுவிஸ் மக்கள் கட்சியின்(SVP) நாடாளுமன்ற உறுப்பினருமான Walter Wobman என்பவர் தான் இந்த சர்ச்சைக்குரிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 

‘சுவிஸ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக உள்ள குரான் புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் சுவிஸ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சுவிஸ் தேசிய கவுன்சிலரான Yannick Buttet இக்கோரிக்கையை எதிர்த்து கருத்தை வெளியிட்டுள்ளார்.

‘குரான் புத்தகத்தை சில ஐ.எஸ் தீவிரவாதிகள் பிற நபர்களுக்கு கொடுத்து தங்களது இயக்கத்தில் சேர்க்க முயற்சிப்பதால் சட்டவிரோதமான சில செயல்கள் நிகழ்கின்றன. ஆனால், இதற்கு புத்தகத்தை தடை செய்வது என்பது கண்டிக்கத்தக்கது. புத்தகத்தை தடை செய்வதை விட இதுக்குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

கிரீன் கட்சியை சேர்ந்த Lisa Mazzone என்பவர் வெளியிட்டுள்ள கருத்தில், ‘குரானை தடை செய்வது என்பது சுவிஸில் மதம் தொடர்பான சுதந்தரத்தில் தலையிடுவதற்கு சமமாகும்.

குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்து அம்மதத்திற்கு சொந்தமான குரான் புத்தகத்தை தடை செய்ய முயற்சிப்பது சுவிஸ் இறையான்மைக்கு எதிரான செயல்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. வன்முறை இருக்கின்றது என்று தடை செய்யப் போனால், திரைப்படங்களை எல்லாம் முதலில் தடை செய்ய வேண்டும்.. குர்ஆனில் மட்டுமல்ல, மகாபாரதம், இராமாயணம், பைபள் மற்றும் சேக்ஸ்பியரின் நூல்கள், ஹோமரின் இதிகாசங்கள் ஆகியவற்றிலும் வன்முறை உள்ளது. அவற்றையும் தடை செய்ய வேண்டும் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. புனித அல்குர்ஆனில் வன்முறை இருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது?

      Delete
  2. Sorry, where do you find terrorism in Islam. Could you point at least one.

    ReplyDelete
  3. Suhood & Fassy, குர்ஆனில் யுத்தங்கள், கொலைகள் தொடர்பில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், மேலும் எப்படி ஜிஹாத் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடும் வசனங்கள் உள்ளன, இவற்றை காபிர்கள் பயங்கரவாதம் / வன்முறை என்று கருதினால், அதே மாதிரியான விடயங்கள் திரைப்படங்களிலும், மற்ற வேதங்களிலும் உள்ளன என்றுதான் சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாம் ஒரு காருண்ய மார்க்கம்.  நீதி அதன் அடித்தளம்.

       இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஓர் போர் திணிக்கப்பட்டால் அவர்கள் தற்காப்புக்காக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே தவிர எவர் மீதும் அநியாயம் புரியுமாறு தூண்டவில்லை. 

      தவிர, இஸ்லாம் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் வன்மையாக எதிர்க்கும் மார்க்கம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

      புனித குர்ஆனை முழுமையாகப் படித்தறிய முயற்சி செய்யுங்கள்.

      Delete
  4. Well said Br.Mahibal M Fassy.

    ReplyDelete
  5. மேற்குலகு இன்னும் நாகரீகமடையவில்லை. மனித சிந்தனை முதிர்ச்சியடையாத பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால்தான் அவர்கள் உள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.