Header Ads



இது கொழும்பு குப்பைப் பிரச்சினையல்ல...!

முஜிபுர் ரஹ்மான் எம்.பி 

கழிவுகள் கொட்டப்படுவதற்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு உடனடியாகத் தேவை என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

“குப்பைகளை அகற்றும் பிரச்சினையை தீர்க்கும் பணியை யாருக்கும் அளிக்காமல் நாட்டின் உயர்பீடம் அதற்காக விஞ்ஞானபூர்வமான தீர்வொன்றை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது கொழும்பு குப்பைப் பிரச்சினை என்று கூறினாலும் முழு நாட்டிலும் உள்ள பிரச்சினையாகும். மீதொட்டமுல்லயில் எனக்குத் தெரிய 1989ம் ஆண்டிலிருந்து குப்பை கொட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் கொலன்னாவ, முல்லேரியாவ, கொடிகாவத்த நகரசபை, பிரதேச சபை குப்பைகளே அங்கு கொட்டப்பட்டன. குப்பைகள் மலை போல் குவிந்து சரிந்து விழுந்து மக்கள் இறக்கும் நிலைமை உருவாவதற்கு முன்னாள் அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமுமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

இதிலிருந்து யாராலும் விலக முடியாது. அதனால் யார் மீதாவது கைகாட்டி விட்டு தப்பிக்க முடியாது. அதற்குக் காரணம் குப்பைகளை அகற்றுவதற்கு எவ்விதமான விஞ்ஞானபூர்வமான தீர்வும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இது பற்றி மிகவும் கவலையடைவதுடன் அது குறித்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

அநேகமானோர் கொழும்புக் குப்பை என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதுவும் குறுகிய நோக்கத்துக்காக கூறப்படுவதாகும். சாதாரணமாக கொழும்புக்கு தினமும் எட்டு இலட்சம் பேரளவில் வருகிறார்கள்.

அந்த எட்டு இலட்சம் பேரும் போடும் குப்பையுடன் கொழும்புக் குப்பையும் சேர்ந்து ஒரு நாளைக்கு எழுநூற்றைம்பது இலட்சம் தொன் குப்பை சேருகின்றது. அதனால் இப்பிரச்சினைக்கு தேசிய தீர்வொன்று அவசிமாகும். முன்னரே இப்பிரச்சினையை அறிந்து தீர்வு கண்டிருந்தோமானால் இத் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வதோடு சிலர் இந்தப் பிரச்சினை மூலம் பணம் சம்பாதிக்கப் பார்க்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் தவறியுள்ளன. இதற்கான தீர்வொன்றை பிரதமர் அண்மையில் முன்வைத்தார். ஏக்கல பிரதேசத்தில் குப்பை மீள்சுழற்சி திட்டமொன்றுடன் குப்பையை அகற்றும் நடவடிக்கையை ஆரம்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அங்குள்ள மக்கள் ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தெரிவித்ததனால் திட்டம் கைவிடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு நாட்டின் உயர் மட்டத்திலிருந்து தீர்வும் காணப்பட வேண்டும். இது கொழும்பு குப்பைப் பிரச்சினையல்ல. நாட்டின் குப்பைப் பிரச்சினையாகும். மரணமடைந்தவர்களும் குப்பையை இங்கேதான் கொடடியிருப்பார்கள். நாட்டின் இந்தப் பிரச்சினைக்கு விஞ்ஞான ரீதியாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

3 comments:

  1. Dear Mujib, Could you please look into the garbage that has been dumped by the road-side in and around Kolonnawa and its subways.It is rotten and smelling and stray dogs are pulling the waste. As as a result and the pedestrians are sufferring. Kolonnawa Urban Council is not in action yet whereas Colombo Municpal is working and have cleaned most of the areas. Please action!!!

    ReplyDelete
  2. மிகவும் நெரிசலாக மக்கள் வாழும் கொழும்பு நகரில் இவ்வளவு பாரிய மலை போல் குப்பைகள் கொட்டுவதட்கு அனுமதி கொடுத்தது மிகப்பாரிய தவறாகும்

    ReplyDelete
  3. இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கான ஓர் எளிய வழி, ஒவ்வொரு குடும்பஸ்தரும் காலையில் தமது இருப்பிடத்தைச் சுற்றி சுத்திகரித்துக் கூட்டி வைத்து அவை காய்ந்த பின் பாதுகாப்பான முறையில் அதே இடத்தில் குப்பைகளை எரித்து விடுவதாகும்.

    பேருவளையில் சிலர் இவ்வாறு வழக்கமாக செய்வதை நான் அவதானித்திருக்கிறேன். இதனால் தமது இருப்பிடத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.