Header Ads



முஸ்லிம் பிரதேசத்தில், சிலை வைப்பின் பின்னணியில் தயா கமகே..!

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் தயா கமகே இருப்பதாகவும் அதனாலேயே இந்த தேரர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யவில்லை என  பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான்  குற்றம் சுமத்தியுள்ளர்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை நேற்று வியா­ழக்­கி­ழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டுள்­ள நிலையில் தனியார் காணிகளில் அத்துமீறி நுழைந்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை  பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை .

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­ல் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை நிறு­வி­யி­ருந்த நிலையில் நேற்­றைய தினம் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ளனர்.

எனினும் ஸ்தலத்­திற்கு விரைந்த இறக்­காமம் பிர­தேச மக்கள் மேற்­படி விகாரை அமைக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­த­துடன் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கும் கொண்டு சென்­றனர்.இச் சம்­பவம் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தியுள்ளனர்.எனினும் அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.அமைச்சர் தயாகமகே இந்த பின்னணியில் இருப்பதால் தேரர்களுக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தயாவும் முஸ்லிங்களின் வாக்குகளை பெற்று ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சியும் முஸ்லீம் மக்களுக்கு செய்யும் கைமாறு இதுதானா என தான் கேட்கபதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.