April 19, 2017

மஹிந்தவின் மிகப்பெரிய ஊழல், மோசடிகள் மைத்திரிபாலவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பான அறிக்கைகளே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளன.

மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு பல்வேறு மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரச தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் ஒளி பரப்பியமைக்கான பணத்தை மீள செலுத்தாமை மற்றும் பசில் ராஜபக்ஸ தொடர்பான ஊழல் அறிக்கைகள் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திறப்பு விழாவுக்காக செலவிடப்பட்ட பணத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கை, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கி சம்பளம் வழங்கியமை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறப்புரிமைகள் வழங்கியமை தொடர்பான அறிக்கை, வீதி வலையமைப்பை நடைமுறைப்படுத்தும் கருத்திட்டத்திற்கமைய சட்டவிரோதமான முறையில் லான் குரூஸ் வாகனமொன்று பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட மூன்று அறிக்கையே ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

3 கருத்துரைகள்:

விசாரணையாளர்கள்:இதோ தலைவா முன்னாள் தலைவரின் குற்றப்பத்திரிகை.
தலைவர்: எல்லாம் செரியாக இருக்கா?
விசாரணையாளர்:ஆம் பிரபு
தலை: OK நீங்கள் போகலாம்.
தலைவர்:ஹலோ முன்னாள் தலைவரா ஆமா எப்படி சுகமா ஆமா உங்களின் ஆட்சிக்காலத்தில் தவருதளால நடந்த விடயங்கள் பற்றிய பத்திரிகையை என்கைக்கு கொடுத்துள்ளார்கள்அதைப்பற்றி நாம் இருவரும் தனியாக இரசியமாக பேச வேண்டும் எப்படி.
முன்னாள் தலை:நான் உங்கள் வீட்டுக்கோ மாளிகைக்கோ வருகின்றேன்.
இந்நாள் தலை:மடத்தனமாக பேசக்கூடாது நீங்கள் இங்கு வந்தால் நாலு பெரு கண்டு நாளைக்கு பேப்பரெல்லாம் போட்டு கிளிச்சிருவானுகள்.நான் வருகின்றேன் பேசுவோம்.
முன்னாள் தலை:OK நாடு இரவுக்கு பின் வாங்கல் பேசுவோம்.
இந்நாள் தலை:இந்த விடயத்தை நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியோடு ஒத்துழைத்து வரக்கூடிய தேர்தலில் நமது கட்சி வெற்றி பெற உதவியாக இருக்க வேண்டும் அதனால் எந்தக்கூட்டமும் நீங்கள் அல்லது உங்களை சார்ந்தவர்கள் நடத்த கூடாது.அப்பப்ப சில விடயங்களுக்கு அதாவது சிறு பான்மை பிரச்சினை தீர்வுகளுக்கு நாங்கள் சப்போட்டாக பேசினால் நீங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்துங்கள் அதில் பிரச்சினை இல்லை.இவ்வாறு நீங்கள் நடந்துகொண்டால் மறு படி நீங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் இந்த பையில்கள் அடியில் போடப்படும்.இல்லை என்றால் பிரச்சினை வரக்கூடிய வாய்ப்பு இருக்குறது என்ன செய்வது?
முன்னாள் தலை:நமக்குள்ள எதையும் செய்து கொள்ளலாம் பார்த்துக்கொள்வோம்,என்று நழுவுவார்.
இதுதான் இந்த நாட்டில் நடக்கிறது.

ஒப்படைத்த என்று நடக்கபோவது ஒன்றும் இல்லை. இது எல்லாம் தினசரி பத்திரிகைகளை அலங்கரிக்க தேவையான எழுத்துக்கள் மட்டும் தான்.

ரீல் அறுந்த இந்தப் பழைய படத்தையே எத்தனை வருஷம்தான் ஓட்டப் போறாங்களோ? நொண்டிக் குதிரையை விற்கின்றவன் அதன் கண்களைப் பற்றி பேசுவானாம், இந்த அரசாங்கமும் அதைத்தான் மறக்காமல் செய்து வருகின்றது.

Post a Comment