Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள், கட்டார் தூதரக மேலதிகாரி சந்திப்பு


வெளியேற்றப்பட்ட யாழ் கிளிநொச்சி சிவில் சமூகங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடந்த 19.04.2017 புதன்கிழமை அன்று கொழும்பிலுள்ள கட்டார் தூதுவராலயத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து யாழ் கிளிநொச்சி முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

சும்மேளனத்தின் தலைவர் அபதுல் மலீக் மௌலவி தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. யுhழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விதம், வெளியேற்றப்பட்ட போது பறிக்கப்பட்ட சொத்துக்கள், வெளியேறிய பின்னர் அகதிகளாக கடந்த 27 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலமை என்பன  ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்;பாளர் ஜனாப் எம்.ஏ.ஆர்.ஏ. ரஹீம் அவர்களினால் தெளிவாக விளக்கப்பட்டது. 

வெளியேற்றத்துக்குப் பின்னர் முஸ்லிம்கள் சந்தித்த அவலங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியேற முயன்ற முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்கள் தடைகள் என்பன பற்றி தலைவர் மலீக் மௌலவி அவர்கள் எடுத்துக் கூறினார். 

யாழ்ப்பாணம், மண்கும்பான், நைனாதீவு,  கிளிநொச்சி, நாச்சிக்குடா போன்ற பிரதேசங்களில் மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்க  செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் அவற்றை நடைமுறைப்படுத்த தேவைப்படும் நிதி சம்பந்தமான விடயங்கள் மற்றும் கட்டார் தூதுவராலயத்திடம் மக்கள எதிர்பார்க்கும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன சம்பந்தமாக சகோதரர் ஜான்ஸின் அவர்கள் விளக்கிக் கூறினார். 

தூதரகம் சார்பில் கலந்து கொண்ட முதல் செயலாளர் சகோதரர் இப்றாஹிம் அப்துல்லாஹ் அல் சிரைம் அவர்களுக்கு மணிபல்லவத்தார் சுவடுகள் நூலில் வெளியிடப்பட்டுள்ள யாழ் முஸ்லிம்களின் வரலாறு உடைந்த கட்டிடங்கள் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் என்பவற்றின் போட்டோக்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. 

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் பற்றி ஆசிரியர் ஹஸன் பைரூஸ் அவர்கள் விளக்கிக் கூறினார். மேலும் நிலாம் அவர்கள் பேசும் போது தையல் மீன்பிடி ஆடு மாடு கோழி வளர்ப்புகள் போன்ற சிறு கைத் தொழில்களை ஊக்குவிக்க கட்டார் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் பல விடயங்கள்  இங்கு கலந்துரையாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியை கட்டார் தூதராலயத்தில் பணிபுரியும் மஸுஹுத்தீன் இனாமுல்லா அவர்கள் மொழிபெயர்த்து ஒருங்கினைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியை அரபு மொழியில் இப்னு ராவுத்தர் அவர்கள் வியங்கப்படுத்தினார். மேலும் பதாஹ் பாரூக்  போன்றவர்கள் யாழ் கிளிநொச்சி சிவில் சமூகம் சார்பில் கலந்து கொண்டனர். 

இறுதியாக முக்கிய மூன்று ஆவணத் தொகுப்புகள் தூதரகத்துக்கு கையளிக்கப்பட்டது. யாழ் கிளிநொச்சி முஸ்லிம்களின் வரலாறும் இழப்புகள் சமபந்தமான தொகுப்பு, தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீள்குடியேற்றம் சம்பந்தமான ஆவணம், காத்திரமான மீள்குடியேற்றம் தொடர்பான முன்மொழிவுகளும் அதற்கு ஏதுவான திட்டமிடல் வரைபுகள் அடங்கிய ஆவணம் என்பன தூதரகத்தின் மேலதிகாரியிடம்  கையளிக்கப்பட்டது.  

இந்த முயற்சி வெற்றிபெறவும் எமது மீள்குடியேற்றத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்ய வேண்டுமென பிரார்த்திக்கின்றோம். ஆமின். 

No comments

Powered by Blogger.