Header Ads



கந்தூரிச் சாப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு நஞ்சான சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று (11) இறக்காமம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் வருகை தந்த அமைச்சர் திசாநாயக்க, பாதிக்கப்பட்டு இதுவரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரை நலன்களையும் விசாரித்ததுடன் அவர்களுக்கான ஆறுதல்களையும் தெரிவித்தார்.

இதனையடுத்து இறக்காமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் அவசர மாநாடு ஒன்றையும் கூட்டி நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

இம்மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க சமுர்த்தி நிதியிலிருந்து மரணித்தோரின் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அவசர கொடுப்பனவாக ரூபா 10 ஆயிரம் வழங்குவதாகவும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்ததுடன், வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ளுமாரும் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் இறக்காமம் பிரதேச இணைப்புக்குழுத் தலைவர் எஸ்.ஐ. மன்சூர் ஆகியோருக்கும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் இறக்காமம் வைத்தியசாலைக்கான கட்டில்கள் மற்றும் வார்ட் தொகுதி, தள்ளுவண்டிகள், மருந்துகள் என்பவற்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் தொடர்பு கொண்டு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

பின்னர், மரணித்தோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் உறவினர்களைச் சந்தித்து அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொண்டார்.

1 comment:

  1. வீடு கட்டப்படுமா அல்லது கட்டிவிட்டு காடு பிடிக்க விட்டு விட்டு விகிதாசார அடிப்படையில் கொடுக்க யோசிக்க மாட்டார்களா?

    ReplyDelete

Powered by Blogger.