Header Ads



கல்முனையில் டெங்கு தீவிரம் - ஆஸ்பத்திரி நிரம்பி வழிகின்றது

கல்முனையில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதுடன் அளவுக்கதிகமான நோயாளிகள் வெளிநோயாளர்பிரிவுக்கு தினமும் வருகை தருவதாகவும் அங்குள்ள விடுதிகள் நோயாளர்களால் நிரம்பிவழிவதாகவும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் விசேட பொது வைத்திய நிபுணர் டொக்டர் இராமநாதன் ரமேஸ் தெரிவித்தார் கடந்த ஜனவரி முதல் மூன்று மாதங்களில் 500க்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் டெங்குத் தடுப்புச் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.இன்றேல் சமூகம் பாரிய தாக்கத்தை சந்திக்க வேண்டிவரும்.

ஆஸ்பத்திரியின் விடுதிக்குவெளியேயும் கட்டில்கள் போடப்பட்டு அவற்றிலும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இனிமேலும் நோயாளிகள் வந்தால் கட்டில்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்தளவுக்கு டெங்கு காய்ச்சல் படுவேகமாக பரவிவருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக டெங்குக்கு அப்பால் ஒருவித வைரஸ் காய்ச்சல் மிகவேகமாகப் பரவிவருகின்றது. வைரஸ் காய்ச்சல் நோயாளிகளை மிகவும் அவதானமாக இருமணி நேரத்திற்கொரு தடவை அவதானித்து சிகிச்சையைளிக்க வேண்டியுள்ளது.

என்ன காய்ச்சல் வந்தாலும் அது டெங்கு காய்ச்சல் என்றே மக்கள் எண்ணுகிறார்கள்.அது தவறானது. தற்போது பல்வேறு வகையான காய்ச்சல்கள் உலாவருகின்றன.

அனுமதிக்கின்ற நோயாளிகளை போதுமானளவு பராமரிக்க போதிய ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. தாதியர்களுக்கும் மிகைநேரம் வழங்கப்பட்டு அவர்களது சேவையும் பெறப்படுகின்றது.

இதுவரை என்1எச்1 என்ற வைரஸ்நோயாளி எவரும் இங்கு இனங்காணப்படவில்லை. டெங்கு காய்ச்சலைத்தவிர வைரஸ் இன்புளுவன்சா என்1எச்1 நோய்க்கான பரிசோதனை செய்ய இங்கு வசதிகள் இல்லை. கொழும்பிற்கு அனுப்பியே பரிசோதனை செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வந்த பின் துன்பப்படுவதை விடுத்து வருமுன் காக்கவேண்டும்.

ஆகவே பொதுமக்களும் குறைந்தது தினமொன்றுக்கு அரை மணிநேரமாவது தமது வீட்டையும் சூழலையும் துப்புரவு செய்யவேண்டும் என்றும் டொக்டர் ரமேஸ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.