Header Ads



பொன்சேக்காவிடமிருந்து, மைத்திரிக்கு சிவப்புக் கொடி..?

பாதுகாப்புத்துறையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிபந்தனைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது அமைச்சுப் பொறுப்புக்கு மேலதிகமாகவே பாதுகாப்புத் துறையை வழிநடத்தும் பொறுப்பை பொன்சேகா ஏற்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பாதுகாப்புத் துறையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்குமாறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமாயின், தமது அமைச்சுப் பதவியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டும் என நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சுப் பொறுப்பை வகிப்பதற்கு மேலதிக பொறுப்பாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக பொன்சேகா கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் செயற்படும் முறைமை குறித்து இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. ஜனாதிபதி எனக்கு இன்னும் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. எனவே, இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

அரச நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில், அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப செயற்பட முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.