April 18, 2017

சிங்கள - தமிழ் புதுவருடமும், முஸ்லிம்களின் வியாபாரமும்..!!

-JM. HAFEEZ-

ஒரு முஃமீனுக்கு துன்பம் வரும் போது இன்னொரு முஃமீன் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.  இதனை வேறு பாசையில் கூறுவதாயின் ஒரு முஸ்லிம்மை துன்பப்பட இன்னொரு முஸ்லிம் வழி சமைக்க மாட்டான். இந்த உண்மையை புரியத சிலர் இவ்வாரம் நிறைவடைந்த தமிழ் சிங்கள புத்தாண்டு வியாபாரம் பற்றி சமூக ஊடகங்களில் நிறைய எழுதி இருநதார்கள்.  முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு வியாபரம் இல்லையே என்று எல்லோருக்கும் கவலை. ஆனால் இந்த விதி நுகர்வோனுக்கும் பொருந்து மல்லவா? மறு புறம் கண்டியில் அண்மையில் திறந்த ஒரு பேரினவாத ஆடை விற்பனை நிலையத்திற்கு ஒரு நாள் வியாபாரத் தொகை நான்கு கோடி முதல் ஐந்து கோடிவரை என்று சமூக ஊடகங்கள் எழுதி இருந்தன. இது மிகை படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும் எனக்கொள்வோமே. 

ஒரு ஊடக வியலாளன் என்ற வகையில் ஒரு நன்மை தரும் ஒரு தகவலை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில்.  கொழும்பு வீதியால் போய்க்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட கடை முதலாளி பாதையில் போகும் என்னைக் கண்டார். பத்திரிகைத் தொழில் ரீதியாக அவர் எனது நண்பர். என்னையா கடும் யோசனையில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.  பாருங்க ஐயா.., வியாபாரம் இல்லையே. வங்கிக்கு பணம் போடவேண்டுமே. உங்களைப் போலவா நான். இன்று எப்படியாவது இத்தனை ரூபா வைப்பில் இடவேண்டும் என்றார். அவர் ஒரு தமிழ் சகோதரர்.

கடந்த மார்ச் மாதம் முதல்  எனது உரவினர் ஒருவரின் திருமணத்திற்கு கடந்த ஒரு மாதாமாக உடுதுணி வாங்க கண்டி, கட்டுகாஸ்தோட்டை, மடவளை , அக்குறணை என பல நாள் அலைந்தோம். 

இஸ்லாமிய வரையறைக்கு உற்பட்ட உடை தேவை என்பதால் முஸ்லிம் பெயர் கொண்ட கடைகளுக்கே அதிகம் சென்றோம்.  அவர்கள் எம்மிடம் கேட்கும் முதலாவது வினா சாதாரண பாவனைக்கா அல்லது ஏதும் விழாக்களுக்கா என்று. எமது பதிலில் இருந்து அவர்கள் எமக்கு உடைகளை காட்ட முயற்சிப்பார்கள். இது நல்ல பழக்கம். அங்கேதான் பிரச்சினையும் மறைந்திருக்கிறது. 7500 (ஏழாயிரத்து ஐநூறு) ரூபாவில் ஆரம்பித்து 13500 (பதின் மூவாயிரத்து ஐநூறு) ரூபா வரை சாதாரண விலை காணப்பட்டது. கூடிய விலை என்ன விலை என்றே கூறத் தேவையில்லை. கடந்த ஒரு மாதாமாக அலைந்தோம். வியாபாரிகளைக் குறை கூற முடியாது பாவம். இஸ்லாமியர்கள் அணியும் அபாயாக்களுக்கும் சல்வார் உடைகளுக்கு தங்கத்திலான நூலால் தைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன், அதனால்தான் அந்தளவு விலையோ தெரியாது.  

கடைசியாக  திருமணப் பெண்ணுக்கு உடுதுணி கொடுக்கும் படலத்தை நிறுத்தி தங்க நகை வாங்குவோம் என்று முடிவு செய்தோம். ஒரு கடையில் போய் தங்க மோதிரம் பற்றி கேட்டோம்.(2500) இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவில் ஆரம்பித்து (12000) பன்னிரண்டாயிரம் ரூபா வரை விலை குறிக்கப்பட்டிருந்தது. தங்க மோதிரத்தை விடவும் தங்க நூலினால் தைத்த அபாயாக்கள் விலை கூட இருப்பதில் ஆச்சரியமில்லையே? இதுதான் எமது இலங்கையின் நிலை. 

கொழும்பிற்கு சற்று அண்மையில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் அவரது வீட்டில் நடக்கும் திருமணத்திற்காக மணப் பெண்ணுக்கு ஆடை வாங்க கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா என  பல இடங்களுக்கு அலைந்தாராம். 35000 (முப்பத்தையாயிரம்) ரூபாவிற்கு குறைய எங்கும் அவருக்கு தேவையான தொகுதியை வாங்க முடிய வில்லையாம். தனக்கு பெரியளவில் வசதியும் இல்லையாம். சரி முஸ்லிம்கள் மிக மோசமாக விமாசிக்கும் துவேசக்காரன் என வர்ணிக்கும் கடையில் வேறு வழியின்றி உள்நுழைந்தாராம். அவருக்குத் தேவையான சகல அம்சங்களும் கொண்ட பிடவைத் தொகுதி விதம் விதமாகத் தெரிவு செய்ய முடிந்ததாம். எவ்வளவு என கணக்குப் போட்டுக் கேட்டாராம். அது வெறும் பதினையாயிரம் ரூபாயைத் தாண்டவில்லையாம்.  தனக்கு இலவசமாகக் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதாம். 

எய்தவன் இருக்க அம்பை குறை கண்ட கதையபோல் இருக்கிறது எமது வர்த்தக நிலையங்களின் நிலைமை. அதே நேரம் கடந்த 14.4.2017 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின் கண்டி மாவட்த்திலுள்ள முஸ்லிம்கள் சற்று அதிகமாக வாழும் ஒரு கிராமத்தில் வர்த்தகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சிலருக்கு எச்சரிக்கை விடுவது போலவும் பள்ளி நிர்வாகியால் ஒரு தகவல் பகரங்கமாக அறிவிக்கப்பட்டது. 

இதன் சாரம்சத்தை சகலரும் தெரிந்துகொள்வது நல்லது. அதன் சுருக்;கம் இதோ- 

சித்திரைப் புத்தாண்ட தொடர்பாக அதிகமான நகரங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் இம்முறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டு விட்டதாக அறிகிறோம். மாஸா அல்லாஹ் எமது ஊரில் (ஊரின் பெரைச் சொல்லி) வர்த்தக நடவடிக்கை வழமை போல் இருந்தது. காரணம் எமது வேண்டுகோளுக்கு இணங்க பின் வரும் மூன்று விடயங்களாக இருக்க முடியும். 

'1.தமக்குத் தெரிந்த அளவில் நேர்மை தவறாது வியாபாரம் செய்தமை.     2.பிற இனத்தவருடன் மிகப் பண்புடன் நடந்து கொண்டமை. 3. கிடைக்கும் சிறிய இலாபத்தைக் கூட தனக்கு என்று மட்டும் எடுத்துக் கொள்ளாது ஊர் தேடிவரும் பிற மக்களுக்கும் நற்கருமங்களுக்கும் தாராளமாக வழங்கியமை முதலான விடயங்கள் எமது கிராமத்தை பாதுகாக்க அல்லாஹ் உதவி செய்துள்ளான். எனவே தொடர்ந்தும் இதேவிதமாக நேர்மையுடன் நடந்து கொள்ளவும்' எனக் கூறியமை அனைவருக்கும் ஒரு பாடமாகட்டும். 

ஆடை வர்த்தகர்களே தயவு செய்து தங்க நூலால் தைத்த ஆடைகளை கைவிட்டு பருத்தி நூலினால் தைத்த ஆடைகளை குறைந்த விலையில் நியாயமான விலையில் விற்பனை செய்யுங்கள். அல்லாத பட்சத்தில் சிலமாதங்களில் வரும் றமலானிலும் இதே நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.  இவ்வாறு சந்தர்ப்பம் பாhத்து இலாபமீட்டுபவர்களுக்கு எந்த சேனைகளும் தேவையில்லை. அல்லாவின் சேனை தேடிவரும் நிலை கூட உருவாகலாம்.

5 கருத்துரைகள்:

200 % damn true it's happen to me also during my sister wedding

All Businesses are competitive today . People have less
money and more needs . There are always expensive and
cheap goods and services everywhere . In 2015 I hired a
car at Colombo airport to Maharagama for Rs 4000 and in
2016 I hired a rental car from Kottawa to Katunayake for
Rs 2500. All Sinhala people . Everything is changing so
fast and both good and bad happening in mix regardless of
who you are . Nobody should try to dominate business in
the name of religion or race . Business is something that
must be free and fair for all everywhere . This is what
modern Srilanka is striving to achieve . In a free market
and in a competitive world , goods not only have price
variations but they do have quality variations too
within a reasonable and affordable limit. Those who try
to rob customers will not last long. There's a crying
need for brand introduction for all commodities so that
the customers know the price that matches the quality.
AND MOST OF ALL CUSTOMERS NEED TO KNOW THEIR BUDGET
AND THE QUALITY OF THEIR HUNT . THERE ARE MAINLY TWO
TYPES OF CUSTOMERS . 1.PRICE HUNT 2. QUALITY HUNT .

I went to Sinhala Textile All the princes are marked, Cheper than Muslim textiles.

Post a Comment