Header Ads



வங்காள விரிகுடாவில் மாற்றம் - சற்றென மாறுகிறது இலங்கையின் வானிலை

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக இலங்கையில் அதன் தாக்கம் உணரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த மழையுடன் கடுங்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக இந்த கடற்பிரதேசங்களில் கொந்தளிப்பு ஏற்படலாம் எனவும், எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.