April 20, 2017

"மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, போராடுவதற்கு தயாராகியுள்ளோம்"


மாவில்லு பேணற்காடு வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான முறைப்பாடொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG ) இன்று (20.04.2017) கையளித்தது.

NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி இம்தியாஸ் முஹம்மட், DR. KM.ஷாஹிர், மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும், NFGGயின் உறுப்பினர்கள் மற்றும் முசலி பிரதேச பிரமுகர்கள் என பலரும் பிரசன்யமாகியிருந்தனர். தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் முசலி பிதேசவாசிகள் உள்ளிட்ட குழவினரே இந்த முறைப்பாட்டினை கையளித்தனர்.

அங்கு ஊடகங்களக்கு கருத்துத் தெரிவிக்கும் போது NFGG பிரதிநிதிகள் குறிப்பிட்டதாவது,

"அரசாங்கத்தின் இந்த வர்த்தமான அறிவித்தலானது முசலி பிரதேச மக்களின் வாழ்வுரிமையினையும், காணியுரிமையினையும் மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.  யுத்தம் நிறைவடைந்ததற்குப் பிறகு தாம் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் மீளக் குடியேறும் மக்களை சட்ட ரீதியாக தடுக்கும் வகையிலேயே இந்த வர்த்தமான அறிவித்தல்கள் அமைந்துள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தின் போதும் 2012 இல் முதன் முறையாக மக்களின் காணிகளை கையகப்படுத்தும் வகையிலான வர்த்தமானி  அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காணிகளில் கூட குடியேற முடியாமல் இன்று வரை அல்லல்பட்டு வருகிறார்கள்.  ஆட்சி மாற்றத்தின் மூலம் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த அரசாங்கத்திற்கு இந்த மக்கள் வாக்களித்தார்கள்.  ஆனால் கடந்த அரசாங்கம் செய்த தவறை மேலும் உறுதியாக்கும் வகையில் இந்த அரசாங்கம் நடந்து கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புதிய வர்த்தமான அறிவித்தலானது முசலி பிரதேச காணிப்பரப்பில் 80 சத வீதமான காணிகளை மக்களிடமிருந்து பறிக்கும் வகையில் அபாயகரமாக அமைந்துள்ளது.

இதனை இல்லாமல் செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட முசலி பிரதேச மக்கள் பல வகைகளிலும் போராடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாமும் அரசாங்கத்திடம் இந்த வர்த்தமான அறிவித்தலை இரத்து செய்யுமாறு பல வகைகளிலும் கோரியுள்ளோம். இருப்பினும்  இதற்கான எந்தவொரு சாதகமான பதிலையும் அரசாங்கம் இதுவரை சொல்லவில்லை. இந்தப் பின்னணியிலேயே மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்ட ரீதியாக போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். 

இதில் முதற்கட்டமாகவே இன்று மனித உரிமை ஆணைக் குழுவிடம் உத்தியோக பூர்வ முறைப்பாடொன்றை சமர்ப்பிக்கின்றோம்.
இதனைத் தொடர்ந்து இந்த வர்த்தமான அறிவித்தலுக்கு எதிரான ஏனைய சட்ட நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம் எனத் தெரிவித்தனர்."

1 கருத்துரைகள்:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:8)

Post a Comment