Header Ads

ரோஹின்யா முஸ்லிம்கள் குறித்து பொய்சொல்லும் ஆங்சான் சூசி

மியான்மரில் சிறுபான்மை இனத்தவரான ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் மீது மனித உரிமை மீறல் நடந்ததாக செய்திகள் பரவலாக வந்துள்ள போதிலும், ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக இன அழிப்பு நடந்ததாக கூறப்படுவதை மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூ சி மறுத்துள்ளார்.

பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பெரும்பான்மையான ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் வாழும் ரக்கீன் மாநிலத்தில் பிரச்சனைகள் நிலவுவதை நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ சி ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், இன அழிப்பு என்ற வார்த்தை பயன்பாடு மிகவும் கடுமையானது என்று ஆங் சான் சூ சி மேலும் தெரிவித்தார்.
அதே வேளையில், நாடு திரும்பும் ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினரை திறந்த மனதுடன் ஆரத்தழுவி மியான்மர் வரவேற்கும் என்றுஆங் சான் சூ சி தெரிவித்தார்.
பிபிசியின் சிறப்பு செய்தியாளர் ஃபெர்கல் கீனிடம் உரையாடிய ஆங் சான் சூ சி , ''இன அழிப்பு எதுவும் நடந்ததாக நான் கருதவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல், இன அழிப்பு என்ற வார்த்தை பிரயோகம் கடுமையானது என்றே நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.