Header Ads



ஒய்ந்து போயுள்ள கொழும்பு

கொழும்பு நகர் இலங்கையில் பொருளாதார கேந்திர நிலையமாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக 24 மணி நேரமும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கும்.

திரும்பிய திசையெல்லாம் ஆள் நடமாட்டம், வாகன நெரிசல், என எப்போதுமே பரபரப்பாக இருக்கும். கொழும்பு நகரை பொருத்த மட்டில் தொழில் நிமித்தம் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருப்பவர்களே அதிகம்.

உணவகம் முதல் கொண்டு கொழும்பில் இயங்கும் பாரிய தொழிற்சாலை வரையில் அனைத்து இடங்களிலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே தொழில் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ள அதேவேளை, கொழும்பை வசிப்பிடமாக கொண்ட பலரும் பருவகாலத்தை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

கொழும்பு நகர் நேற்று வரையிலும் மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த நிலையில், இன்று வெறிச்சோடி போய் காணப்படுகின்றது. வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லை. போக்குவரத்தும் மிகவும் மந்த கதியிலேயே இயங்கி கொண்டிருக்கின்றது.

கொழும்பு நகரின் பிரதான கடைகள் உள்ளிட்ட தெருவோர கடைகள் முதற்கொண்டு அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கொழும்பு நகர் வழமைக்கு திரும்ப இன்னும் இரண்டொரு நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.