Header Ads



ஜனாதிபதியை உசுப்பேத்தும், டிலான் பெரேரா

மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி அதிகாரத்தினை உரிய வேளையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தலில் தோற்று மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் அவமதிப்பினை பெற அவர் தனது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை சர்வாதிகார போக்கில் பயன்படுத்தியமையே காரணம். இதனாலேயே 2015 ஆம் ஆண்டியின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கான அதிகாரங்களை கட்டுப்படுத்தி 19 ஆம் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி செயற்படும் விதமானது நாட்டில் குழப்பத்தையும் மக்கள் மத்தியில் ஒரு விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சிக்கும் நாட்டுக்கும் பாரிய சிக்கல்களை உண்டுபண்ணியுள்ளது.

பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தலையிட்டு தீர்வுகளை எட்டியுள்ள நிலையில், தமது அதிகாரங்களையம் சரியான முறையில் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும்.

அந்தவகையில் எமது கட்­சியின் தலைவரும் நாட்டின் தலைவருமான ஜனாதிபதிக்கு மே தினக் கூட்டத்தில் ஒரு சிகப்பு எச்சரிக்கையாக நாம் இந்த விடயங்களை சுட்டிக் காட்டுவோம், இது எங்களுடைய கடமையாக உள்ளது.

அத்துடன் உரிய முறையில் தனது அதிகாரத்தினை பயன்படுத்துவாராக இருந்தால் அவரை தவிர வேறு ஒருவராலும் ஆட்சிக்காலம் முடியும் வரையில் ஆட்சியை கவிழ்க்க முடியாது என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஜனாதிபதி அவர்களுக்கு உரிய அதிகாரத்தை சிறுபான்மை முக்களுக்கு காட்டுவார் ஆனால் பெரும்பான்மை இனவாதிகளிடம் காட்ட மாட்டார்,

    ReplyDelete

Powered by Blogger.