Header Ads



மன்னிப்புக் கேட்டார் ரணில்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்துள்ள நிலையில், மக்களைக் காப்பாற்ற முடியாது போனமைக்கு தாம் மன்னிப்புக்கோருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்தித்துப் பேசிய போது, அங்கிருந்தவர்களில் ஒரு பெண், இந்த பேரழிவை தடுப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விப் பதிலளித்துப் பேசிய பிரதமர், குப்பை சுழற்சி நடைமுறையொன்று எமது நாட்டில் கிடையாது. எனினும், குப்பை மேட்டை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, மக்களை காப்பாற்ற முடியாமல் போனமைக்கு தான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக பிரதமர் குறிப்பிட்டார் என்று கொழும்பு ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.

இதுவொருபுறமிருக்க, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்ட அனைவருக்கும் மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்.

1 comment:

  1. Ranil being PM seems to b doing social service at his leisure as a globe trotter. It's our fate these guys r our leaders brushing aside sorry for a human desaster .

    ReplyDelete

Powered by Blogger.