Header Ads



விகாரை அமைக்க சுவீ­க­ரிக்­கப்­பட்­ட, முஸ்­லிம்­க­ளின் காணி எல்­லை­யி­டப்­பட்­டது

-ARA.Fareel-

இறக்­காமம் மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பௌத்த விஹாரை அமைப்­ப­தற்­காக சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 2 ½ ஏக்கர் காணி நேற்று முன்தினம் நில அளவை அதி­கா­ரி­களால் எல்­லை­யி­டப்­பட்­டது.

குறித்த காணிகள் பள்­ளியான் செயி­னுதீன் மற்றும் ஆதம் லெவ்வை சமீமா ஆகி­யோ­ருக்குச் சொந்­த­மா­ன­வை­க­ளாகும். முஸ்­லிம்­களின் காணிகள் திடீ­ரென சுவீ­க­ரிக்­கப்­பட்டு அளவை செய்­யப்­பட்­டுள்­ள­மைக்கு பிர­தேச மக்கள் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர்.

இதே­வேளை, மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்­திற்கு அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை அம்­பாறை மேல­திக மாவட்ட நீதி­மன்றம் எவரும் நுழை­யா­த­வாறு இடைக்­காலத் தடை உத்­த­ரவு அமைப்­ப­தற்­கான காணிகள் பிரித்­தெ­டுப்பு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். 

இதே­வேளை, மாகாண காணி­யாளர் அனுர தர்­ம­தாஸ, அம்­பாறை மாவட்டச் செய­லாளர் துஷித்த வணிகசிங்க  ஆகி­யோரின் பணிப்­பு­ரைக்­க­மை­வாக வருகை தந்த நில அளவைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் இறக்­காமம் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுத் தலைவர் பொறி­யி­ய­லாளர் எஸ்.ஐ.மன்சூர், காணிச் சொந்­தக்­கா­ரர்கள் சார்­பா­கவும், பிர­தேச மக்கள் சார்­பா­கவும் தமது காட்­ட­மான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தியும், எதிர்ப்­பினைக் காட்­டியும் வரு­கை­தந்த பொலிஸ் உயர் அதி­கா­ரி­களும் நில அளவை உத்­தி­யோ­கத்­தர்­களும் தங்­க­ளுக்கு மேல்­நிலை அதி­கா­ரி­களின் பணிப்­பு­ரைக்­க­மை­யவே உரிய இடத்­தினை அளந்து அதா­வது திணைக்­கள பட வரைபில் குறிப்­பிட்­ட­தற்­க­மை­வாக பிரிவு 52 தொடக்கம் 55 வரை (4 Lote) 2.5 ஏக்கர் அள­வி­டப்­பட்டு எல்லாக் கற்­களும் பதிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த பிர­தே­சத்தில் எந்­த­வொரு பௌத்த பிர­ஜை­யி­னது குடி­யி­ருப்­புகள் இல்­லாத போதும் மேற்கூறப்பட்ட திட்டமிட்ட அடிப்படையில் காணிகள் அபகரித்தமையானது நல்லாட்சியிலும் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் செயலாகும் என பல்வேறு தரப்பினரும் அங்கலாய்க்கின்றனர்.  

இதேவேளை, இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பௌத்த விகா­ரை­யொன்று நிர்­மா­ணிப்­ப­தற்­காக சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்ள 2 ½ ஏக்கர் காணி­களின் உரி­மை­யா­ளர்கள் இருவர் நேற்று இறக்­காமம் பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்கு பேச்­சு­வார்த்­தைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்தும் அவர்கள் அங்கு செல்­ல­வில்லை. 

காணி உரி­மை­யா­ளர்­க­ளான செயி­னுதீன் மற்றும் ஆதம் லெவ்வை சமீமா ஆகிய இரு­வரும் உதவிக் காணி ஆணை­யா­ள­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்கு நேற்று இறக்­காமம் பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இது தொடர்பில் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம். நஸீரை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­ய­போது குறிப்­பிட்ட காணி உரி­மை­யா­ளர்கள் இரு­வரும் இன்று (நேற்று) பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தும் அவர்கள் சமு­க­ம­ளிக்­க­வில்லை. அவர்கள் வீடு­களில் இல்­லை­யென்றும் அக்­க­ரைப்­பற்­றுக்குச் சென்­றுள்­ள­தா­கவும் சிலரால் தெரி­விக்­கப்­பட்­டன. 

அவர்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கத்தால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அழைப்புக் கடி­தங்கள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்­கப்­படும். அவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவது தொடர்பாக உதவி காணி ஆணையாளரினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றார்.  

No comments

Powered by Blogger.