Header Ads



முஸ்லிம்கள் நடிப்பதை, நிறுத்த வேண்டும் - யூசுப் முப்தி

முந்திய காலத்தில் நோபல் பரிசு இருந்திருந்தால் முஸ்லிம்களே அதனை அதிகம் பெற்றிருப்பார்கள் என இலங்கையின் பிரபல மார்க்க அறிஞரும், 'ஸம்ஸம்' பௌன்டேசனின் ஸ்த்தபாகருமன யூசுப் முப்தி தெரிவித்தார்.

சுவிஸ் - சிலீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் சனிக்கிழமை 8 ஆம் திகதி நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் சமூகத்திடம் தற்போது கண்டுபிடிப்புகள் குறைந்துவிட்டது, முஸ்லிம்கள் இந்த உலகிற்கு மகத்தான பங்களிப்புகளை நல்கினர். புதிய கண்டுபிடிப்புகளின் உரிமையாளர்களாக விளங்கினர். முந்திய காலத்திலேயே நோபல் பரிசு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முஸ்லிம்களே அதனை அதிகமாக அள்ளிச் சென்றிருப்பர். அந்தளவு தூரம் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினர். எனினும் இன்று முஸ்லிம்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது.

உலகில் இஸ்லாமிய கிலாபத் இல்லாமல் போனது இதற்கு காரணம் ஆகும். இதனால் முஸ்லிம்களே நஷ்டப்பட்டவர்களாக விளங்குகின்றனர்.

மற்றவர்களுடைய பார்வையில் நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களாக விளங்குகிற போதிலும் நடைமுறை அவ்வாறானதல்ல. நான் ஒரு முஸ்லிமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு முஸ்லிம் கெட்ட செயல்களில் ஈடுபட்ட மாட்டான்.

முஹம்மது நபிக்கு நபித்துவம் கிடைக்குமுன்னரே அவர்கள் உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற பெயர் கிடைத்திருந்தது. எங்களுக்கு நாங்கள் உண்மையான முஸ்லிமாக விளங்க வேண்டும். முஸ்லிம் என்ற போர்வையில் நடிப்பதை நிறுத்த வேண்டும். தினமும் இரவு நித்திரைக்கு செல்லும்போது எங்களிடம் நாம் வினா தொடுக்க வேண்டும். தயவுசெய்து முஸ்லிமாக நடிப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

இஸ்லாம் பின்பற்றக்கூடிய மார்க்கம் மாத்திரமல்ல. அதனை செயலிலும் காண்பிக்க வேண்டும். ஒரு முஸ்லிமை நோக்குககையில் அவனிடம் குறை தென்படுகிறதென்றால், அது அந்த முஸ்லிமிடம் காணப்படும் குறை அல்ல. மாறாக அது மற்றைய முஸ்லிம்மை குறையாக நோக்கும் முஸ்லிமுடைய அழுக்குப் பார்வையாகும் . அதுதான் இந்த முஸ்லிமுடமுள்ள குறை அவனினல் பட்டு இது இவனுக்கு குறையாக விளங்குகிறது.

முஸ்லிம்கள் இன்று ஈமானை ஒரு வார்த்தையாக நோக்குகின்றனர். ஈமான் என்பது வார்த்தையல்ல. மாறாக அது உள்ளத்தை இருந்து வரக்கூடியது. 

உலிகல் தூவப்படும் ஒவ்வொரு விதையையும் அல்லாஹ்வே நிர்வாகிக்கிறான். அவரே அந்த விதைiயு பரட்டி, நிலத்தை கிளப்பி மரத்தை செழிக்கச் செய்கிறான். இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் உலகின் எம்மூலையில் இருந்தாலும் ஈமானுடன் வாழ் உறுதி பூணுவோம் என்றார்.

யூசுப் முப்தியின் இந்த பயான் நிகழ்வில் சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் குடும்ப சகஜதம் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. His point is that Muslims need to stop being hypocrites.
    But his full speech is contradicting with the point .
    He asks Muslims to be serious followers of Islam and to
    stop being fakes, meaning 'not being good Muslims.' And
    then he finds fault with the Muslims who censure wrong
    doing fellow Muslims ! You can not have it both ways !
    If some Muslims are wrong or not good , it is Muslims
    who should be quick to disapprove it. So , learned
    people like Muftis should take every precaution in
    making their speeches , statements and any other form
    of expressions to the public in general about the
    religion and its followers . AVOID CONTRADICTIONS .

    ReplyDelete

Powered by Blogger.