Header Ads



1996 உலகக் கிண்ண வெற்றி நாயகர்கள், கிரிக்கெட் துடுப்பின் வடிவில் சொகுசுக் குடியிருப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர்­களின் நலன்­களைக் கவ­னிக்­க­வென 1996 உலக கிண்ண வெற்­றி­நா­ய­கர்கள் அனை­வரும் உதவிக் கரம் நீட்ட முன்­வந்­துள்­ளனர்.

ஏற்­க­னவே இரண்டு முன்னாள் வீரர்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கிய வெற்றி நாய­கர்­கள், ‘96 வெற்றி நாய­கர்கள் சதுக்கம்’ ((’96 Legends’ Square’) என்ற பெயரில் நிரு­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள சொகுசு குடி­ம­னைகள் கொண்ட 69 மாடி கட்­டடத் தொகு­தியின் வருவாய் மூலம் 500,000 இலட்சம் ரூபாவை முன்னாள் வீரர்­களின் நலன்­க­ளுக்­கான நிதி­யத்தில் வைப்­பி­லி­ட­வுள்­ளனர்.

‘96 வெற்றி நாய­கர்கள் சதுக்கம்’ தொடர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்ட நிகழ்வில் பேசி­ய­போது மேற்­கண்ட தக­வலை உலகக் கிண்ண சம்­பயின் அணித் தலை­வர், துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

ஹில்டன் ஹோட்­டலில் அண்­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் உலகக் கிண்ண சம்­பியன் அணியில் இடம்­பெற்ற 14 வீரர்­களில் பன்­னி­ரு­வரும் ‘96 வெற்றி நாய­கர்கள் சதுக்கம்’ என்ற பெயரில் குடி­மனை கட்­டடத் தொகு­தியை நிர்­மா­ணிக்கும் வில்ஸ் ரியல்டர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் பிர­தி­நி­திகள் ஆகி­யோரும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

21 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாகிஸ்­தானின் லாகூரில் (1996 மார்ச் 17) நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான உலகக் கிண்ண இறுதிப் போட்­டியில் 7 விக்­கட்­களால் வெற்­றி­பெற்று உலக சம்­பி­ய­னான இலங்கை அணியில் இடம்­பெற்ற 14 வீரர்­களும் இந்த குடி­மனை கட்­டடத் தொகு­தியின் சிறப்பு தூதர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

‘‘சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் முன்னாள் (எமது முன்­னோடி) வீரர் ஒரு­வ­ரது இறுதிக் கிரி­யை­களில் கலந்­து­கொண்­ட­போது அன்­னா­ரது மகன் என்­னிடம் கூறிய விடயம் என்னைப் பெரிதும் புண்­ப­டுத்­தி­யது. அதன் கார­ண­மாக எமது முன்­னோடி கிரிக்கெட் வீரர்­களின் நலன்­களில் அக்­கறை செலுத்­து­வ­தென நாங்கள் அனை­வரும் முடி­வெ­டுத்தோம்.

எமது முன்­னோ­டிகள் எங்­க­ளுக்­கான சரி­யான பாதையைக் காட்­டி­யி­ரா­விட்டால் நாங்கள் உலக சம்­பி­ய­னாகி இருக்க முடி­யாது. மேலும் அர­சாங்­க­மோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னமோ முன்னாள் வீரர்­களின் நலன்­களில் அக்­கறை கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இதன் கார­ண­மாக அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னி­யிலும் மெல்­பர்­னிலும்  இரண்டு போட்­டி­க­ளையும் நிகழ்ச்­சி­க­ளையும் ஏற்­பாடு செய்து நிதி திரட்­டினோம். அந்த நிதியைக் கொண்டு இரண்டு முன்னாள் வீரர்­க­ளுக்கு உத­வினோம்’’ என்றார் அர்­ஜுன ரண­துங்க.

இந்தக் கட்­டடத் தொகுதி ஏனைய கட்­டடத் தொகு­தி­களைப் போன்று வடி­வ­மைக்க வில்ஸ் ரியல்டர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் பிர­தி­நி­திகள் திட்­ட­மிட்­டனர். ஆனால் இந்தத் கட்­டடத் தொகுதி கிரிக்கெட் பந்­து, கிரிக்கெட் துடுப்­பு­களின் தோற்­றத்­தில்­நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும் என்­பதில் அர்­ஜுன குழு­வினர் உறு­தி­யாக இருந்­தனர்.

இதன்­படி அர்­ஜு­னவின் ஆலோ­ச­னையின் பேரில் 69 மாடி­களைக் கொண்ட இந்த சொகுசு குடி­ம­னைகள் கட்­டடத் தொகுதி கிரிக்கெட் விளை­யாட்டை நினை­வுப்­ப­டுத்­து­வ­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை சம்­பி­ய­னாகி 25 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கும்­போது இந்த கட்­டடத் தொகுதியும் பூர்த்தி செய்யப்பட்டு பாவனைக்கு விடப்படவுள்ளது.

மேலும் முழு உலகிலும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையதாக அமைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாகவும் அமையவுள்ளது. இந்தக் கட்டடத் தொகுதியில் கிரிக்கெட் நூதனசாலை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.